புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 25, 2024)

வேதத்திலுள்ள அதிசயங்கள்

சங்கீதம் 119:18

உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.


நீங்கள் மிக முக்கியமான விஷயத்திற்காக, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். குறித்த நேரத்திலே நீங்கள் அந்த இலக்கை அடைய வேண்டும். போகும் வழியிலே அநேக விஷ யங்களை நீங்கள் கற்றுக் கொள்லாம். ஆனால், அவ்விஷயங்கள் நீங்கள் செய்யும் பயணத்திற்கு ஆதரவாக இல்லாமல், தடைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தும் என் றால், அந்த விஷயங்கள் எவ்வளவு நன்மையை தருகின்றதாக தோன் றினாலும் அதனால் இலாபம் என்ன? 'வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப்போ லிருக்கிறான்.' (நீதிமொழிகள் 26:17). இன்று வேதத்தின் இரகசியங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று சிலர் அதிகதிகமாக பிரயாசப் படுகின்றார்கள். இந்த வெளிப்பாடுகள், மனித அறிவினாலோ, உலகத்தி னால் உண்டாயிருக்கும் கலாசாலைகளினாலே உண்டாகமல், தேவ ஆவியினாலே உண்டாக வேண்டும். அதிக படிப்பு உடலுக்கு இளை ப்பை உண்டுபண்ணும். ஆனால், தேவனை அறிகின்ற அறிவின் வளர் ச்சி ஆத்துமாவை உயிர்பிக்கும். எனவே. வேதத்தின் அதிசயங்களை நான் அறிவும் படிக்கு, தேவ ஆவியானவர் நம்முடைய மனக் கண் களை திறக்க வேண்டும். அந்த பிரகாசமுள்ள மனக்கண்களாலே, நாம் தேவனை அறிகின்ற அறிவு இன்னதென்பதை உணர்ந்து கொள்ள முடி யம். அந்த அறிவிலே உள்ளான மனிதனானது நாளுக்கு நாள் புதி தாக்கப்படும். பாடநுபவித்தாலும், பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்கின்ற கிறிஸ்துவின் சிந்தையானது அவர்களின் உரு வாகும், அதனால் அவர்கள் தங்கள் வாழ்யின் அனுபவங்கள் வழியாக மறுரூபமாக்கப்படுகின்றதை மற்றவர்கள் கண்டு, பிதாவாகிய தேவனை மகிமைப் படுத்துவார்கள். வேறு சிலரோ, வேதத்தின் இரகசியங்களை அறிய வேண்டும் என்று, தங்களுக்கென்று தலைவர்களை தெரிந்து கொண்டு, ஆண்டவர் இயேசுவை பின்பற்றாமல், தாங்கள் விரும்பும் தலைவர்களை பின்பற்றுவதால், பாதி வழியிலே தங்கள் இலக்கை மறந்து போய்விடுகின்றார்கள். தாங்கள் தாபரிக்கும் ஊர் பரம தேசம் என்பதை குறித்து உணர்வற்றுப் போவதினாலே, ஊருக்குப் போகும் வழியை அறியாத மூடனைப் போல, அவர்கள் வழியிலே கொடுக்கும் தொல்லை ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும். நீங்களோ ஞானமுள்ள பிள்ளைகளைப் போல முன்னோக்கி செல்லுங்கள்.

ஜெபம்:

சத்திய ஆவியானவரை எனக்கு தந்த தேவனே, நான் பாதி வழியிலே இறுமாப்படைந்து உணர்வற்றுப் போகாமல், உம்முடைய திருக்குமாரனின் சாயலிலே வளர்ந்து பெருக கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிரசங்கி 12:12-13