புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 24, 2024)

அறியாத ஆழங்கள்

மத்தேயு 7:24

ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.


சமுத்திரத்தில், கப்பல் வழியாக தான் தாபரிக்கும் ஊருக்கு சென்று கொண்டிருந்த வாலிபனுக்கு, தீரென்ற ஒரு எண்ணம் உண்டாயிற்று. இந்தப் பாரிய கப்பல், சமுத்திரத்தில் மிதக்கின்றதே, இந்த சமுத்திரத் தில் ஆழம் என்ன என்று அறியும்படி விரும்பினான். அதன்பொருட்டு, பல யுத்திகளை செய்து, சமுத்திரத்தின் ஆழத்திலே செல்ல ஆரம்பித் தான். அநேக அதிசயமான காரி யங்ளை கண்டு பிடித்தான். ஆனால், அவைகளைவிட அவன் பிரயாணத்திற்கு அத்தி யவசியமான காரியங்கள் பல இருந்தன. அதிசயமான காரிய ங்களால் பரவசமடைந்தவன், அத்தியவசியமானவைகளை மறந்து போய்விட்டான். ஒரு நாள், அவன் சமுத்திரத்தின் ஆழ த்திற்குள்ளே சென்ற போது, கடலிலே வாழும் சில ஐந்துக் களால் தாக்கப்பட்டு, மிகவும் காயப்பட்டு, படுகாயங்களுடன் மயிரி ழையில் உயிர் தப்பினான். ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, இன்று விசுவாசிகளில் பலர், வேதத்தின் ஆழத்தை அறிய வேண்டும் என்று அறியாத ஆழங்களுக்குள்ளே செல்கின்றார்கள். ஆனால், தங் கள் வாழ்க்கையிலே, மனமாற்றத்திற்காக தற்போது செய்யப்பட வேண் டிய அடிப்படைக் காரியங்களை மறந்து போய்விடுகின்றார்கள். எடுத்து க்ககாட்டாக, ஒரு விசுவாசியின் உள்ளத்திலே இன்னுமொரு விசு வாசியை மன்னிக்க முடியாதபடிக்கு, அநேக நாட்களாக மனதிலே கச ப்பு உண்டாயிருக்கும் வேளையிலே, மோசேயானவன், கடந்து சென்ற வனாந்திரத்திலே எத்தகைய காலநிலை இருந்தது, எப்படிப்பட்ட வன விலங்குகள் இருந்து என்று ஆராய்ந்து பார்க்கும்படி பாடங்களை கற் கின்றார்கள். மனதிலே கசப்பு உண்டானால் என்ன செய்ய வேண்டும் என்று யாவரும் புரிந்து கொள்ளும்படிக்கு ஆண்டவராகிய இயேசு தெளிவாக காரியங்களை கூறியிருக்கின்றார். ஆனால், உள்ளான மனித னுக்குரியவைகளை மறந்து விட்டு, தங்கள் குற்ற உணர்வுகளை மறை க்கும்படிக்கு, ஆழமானவைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று தங்கள் நாட்களை விரயப்படுத்ததுக்கின்றார்கள். வேறு சிலர் அறியாத ஆழங்களுக்குள்ளே நுழைந்து, விவாதங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி, தங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் குறித்த கருப்பொருயை மறந்து போய்விடுகின்றார்கள்.

ஜெபம்:

நித்திய ராஜ்யத்திற்கென்று அழைத்த தேவனே, நான் என் அழைப்பையும், தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி எனக்கு உணர்வள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 1:10