தியானம் (ஆவணி 23, 2024)
பாதகமற்றவைகளாக தோன்றுபவைகள்
பிலிப்பியர் 3:12
கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்து க்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.
தூர தேசமொன்றிற்கு சுற்றுலா சென்ற வாலிபனாவன் சென்ற பஸ் வண்டியானது, எதிர்பாராத விபத்தொன்றில் அகப்பட்டதால், தன் சொந்த ஊருக்கு திரும்ப முடியாதபடிக்கு தனியே விடப்பட்டிருந்தான். அவனுடைய தகப்பனானவர், ஐசுவரியமுள்ளவராக இருந்ததால், கடல் வழியாக வீடு திரும்பும்படிக்கு, அவனுக்கு ஒரு கப்பலை ஆயத்தப்படுத்தி, அவனுடைய கடல் யாத்திரைக்கு வேண்டிய யாவற்றையும் செய்து கொடுத்தார். தன் சொந்த ஊரருக்கு திரும்பப் போகின்றேன் என் பரவசத்துடன் கடல் யாத்திரையை ஆர ம்பித்தான். சில நாட்கள் சென்றதும் எங்கும் கடல் மயமாகவே இருந் ததால், பொழுதைக் கழிக்க, ஏதா வது புதிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று. தன் கப்பலின் பருமனை, கடலிலே சென்று கொண்டிருக்கும் மற்றய கப்பலுடன் ஒப்பிட்டுப் பார்த் தான். பின்னர், எப்படி மிகவும் பராமான இந்தக் கப்பல் மிதக்கின்றது என்பதைக் குறித்து ஆராய ஆரப்பித்தான். இவற்றிலே அதிக நேரங் களை செலவு செய்து வந்ததால், தன்னுடைய இலக்கை குறித்த எண் ணம் அவன் மனதிலே தணிய ஆரம்பித்தது. கப்பலை பராமரிக்கும் காரியங்களை தவறவிட்டான். சிறிதாக ஆரம்பித்த பொழுதுபோக்கு, அவனுக்கு புத்தியை தெளிவிக்கின்றதாக இருந்தது. அதனால் அவன் அவற்றை குறித்து மிகவும் ஆர்வம் கொண்டான். அவன் கடற் யாத்தி ரைக்காக அனுதினமும் தான் செய்ய வேண்டிய கடமைகள் பொறுப் புகளை மறந்து போனான். பிரியமான சகோதர சகோதரிகளே, பரம யாத்திரிகளாக இந்த உலகத்தை கடந்து கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த யாத்திரைக்கு வேண்டிய யாவற்றையும் தேவனாகிய கர்த்தர் கொடுத்திருக்கின்றார். நாட்கள் கடந்து செல்லும் போது, சலிப்படைந்து போய்விடாதபடிக்கு, இலக்கின் மேல் கண்களை பதிய வைத்துக் கொள்ளுங்கள். அதன்படிக்கு, அனுதினமும், வேதவார்த்தைகளால் நீங்கள் செய்ய வேண்டியவைகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். பொழுபோக்குகள் உங்களுக்கு பாதகமற்றதாக தோன்றலாம். அவை சிறிதாக ஆரம்பித்து, பின்னர் உங்கள் உள்ளத்தை ஆளுகை செய்யா தபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள். கிறிஸ்து இயேசுவினால் நீங்கள் எதற்காகப் பிடிக்கப்பட்டீர்களோ அதை பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்ந்து முன்னேறுங்கள். இலக்கை அடைவதற்றானவை களை செய்வதற்கு மறந்து போய்விடாதிருங்கள்.
ஜெபம்:
பரம அழைப்பின் பந்தையப் பொருளுக்காக என்னை அழைத்த தேவனே, தாபரிக்கும் ஊர் எது என்பதை நான் பாதி வழியில் மறந்து மதியீனனாக மாறாதபடிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ஆதியாகம் 3:6