புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 22, 2024)

நீங்கள் ஆவலுடன் நடப்பிப்பவைகள்

சங்கீதம் 143:10

உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும் நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக


திவ்விய சாயலிலே வளர்ந்து பெருகும்படிக்கு அழைப்பட்ட என் வாழ்வு சரியான பாதையிலே போகின்றதா என்று எப்படி அறிந்து கொள்வது? நாம் நம் நிலைமையை ஆராய்ந்து அறிந்து கொள்ளக் கூடிய சில வழிகளை இன்று ஆராய்ந்து பார்ப்போம். நாளாந்த வாழ்;க்கையிலே நாம் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு. எடுத்துக்காட்டாகவே, கல்வி, வேலை, குடும்பத்தை கவனி ப்பது என்று பல காரியங்களை விரு ம்பியோ விரும்பாமலோ தினமும் நாம் செய்து வருகின்றோம். ஏனெ னில் சில கடமைகளை நாம் தவிர் த்துக் கொள்ள முடியாது. அதைவிட நாம் இரவிலே இளைபாற வேண்டிய நேரம் உண்டு. அவைகள் போக, மிகு தியான நேரங்களிலே நீங்கள் மன தார விரும்பி செய்யும் பொழுது போக் குகள் என்ன? அவற்றுள் ஐந்து காரி யங்களை பட்டியல்படுத்திக் கொள் ளுங்கள். என்னதான் நடத்தாலும், நான் எப்படியும் செய்து முடிப்பேன் என்று ஆவலோடு நடப்பிக்கும் முதல் மூன்று காரியங்களை தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, நண்பர்களோடு பேசிக்கொள்வது, ஊடகங்களிலே வரும் சுவாரசியமான காரியங்களை பார்ப்பது, குறித்த நாளிலே நடக்கவிருக்கும் விளையாட்டுப்போட்டிகளை தொலைக்காட் சியில் பார்ப்பது போன்ற உங்கள் மனதில் சலித்துப் போகாத விருப் பங்களை பட்டியல் படுத்துங்கள். அவற்றுள் வேத வாசிப்பும், ஜெபமும் எங்கே இருக்கின்றது என்று உண்மையாய் ஆராய்ந்து பாருங்கள். சிலர் அது முதலிடம் என்று காலையிலே எழுந்தவுடன் அதை செய்து விடுவோம் என்று கூறிக் கொள்வார்கள். நல்லது, அப்படியானால் காலையிலே எழுந்து அவற்றை கடமையாக செய்கின்றீர்களா? அல்லது மன வாஞ்சையோடு செய்கின்றீர்களா? இரவு விருந்திக்கு ஒருவருடைய வீட்டிற்கு செல்லும் போது, நான் நேரத்தோடு சென்று உறங்கி காலை யிலே எழுந்து என் ஆத்தும நேசரோடு நேரத்தை செலவிட வேண்டும் என்கின்ற வாஞ்சை உண்டா? அப்படி இல்லையென்றால், பரலோகத்தி லிருந்து நன்மையானவற்றை நமக்கு தருகின்ற பரம பிதாவினிடத்தில் கேளுங்கள். துணையாளராகிய தூய ஆவியானவரின் துணையை நாடு ங்கள். அவர் உங்களுடைய வாழ்க்கையில் தேவனுக்கு பிரியமானரவை களை வாஞ்சையோடு நடப்பிக்க உங்களுக்கு உதவி செய்வார்.

ஜெபம்:

உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவின் சாயலில் வளர என்னை வேறு பிரித்த தேவனே, நீரே என் ஆத்தும நேசர் என்று நான் மனதார கூறும்படிக்கு, உம்மைக் குறித்த வாஞ்சை என் வாழ்விலே பெருவதாக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கொலோ 3:5