புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 21, 2024)

என் வாழ்வில் நிலைமை என்ன?

புலம்பல் 3:39

நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்


இன்று மனிதர்கள் பொதுவாக தங்களுடைய நிதி நிர்வாக நிலைமை களை ஆராய்ந்து அறிவதுண்டு. அப்படியாக தாங்கள் முறைப்படி நிதி நிலைமைகளை ஆராய்ந்து அறிவதில்லை என்று கூறும் மனிதர்கள், தங்கள் கையிலே, கணக்கிலே, சொத்திலே எவ்வளவு பணம் இருக்கி ன்றதென்பதை அன்றாடம் நன்றாகவே அறிந்திருப்பார்கள். கையிலே, கணக்கிலே, சொத்திலே இருப்பவை அநித்தியமானவைகளாக இருக்கின்ற போதிலும், தங்களிடம் இருப்பவை களை கணக்குப்பார்த்து, ஆராய்ந்து அறிவது நல்லது. அதுபோலவே நாம் நம்முடைய ஆன்மீக வாழ்வை அவ்வ ப்போது ஆராய்து அதைவிட மேலான தும், முக்கிமானதுமாக இருக்கின்றது. ஞாயிறுதோறும் ஆலயத்திற்கு செல்கின்றவர்கள், தேவ செய்தியை கேட்கின்றார்கள். அந்த செய்தியானது தங்கள் தனிப்பட்ட வாழ்க் கையை குறித்ததாக இருந்தால், அதை நல்மனதோடு ஏற்றுக் கொள்கி ன்றவர்கள் எத்தனை பேர்? ஒருவேளை உபதேசம் செய்கின்றவர்கள் அறிந்தோ அறியாமலோ, உங்கள் குடும்பத்திலே, வாழ்விலே இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டி கடிந்து கொள்ளும் போது, அந்த கடிந்து கொள்ளுதலை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகின்றதா? சற்று ஆரா ய்ந்து பாருங்கள். இன்று விசுவாச மார்க்கத்தாரில் பலர், முறைமை களில் அதிக கவனத்தை செலுத்துகின்றார்கள். போதகர் இப்படி சொல் லாமல், என்னை அழைத்து தனியாக பேசியிருக்கலாம் என்று கூறு வார்கள். தனியாக பேசினால், சபையில் பலர் ஏதோ பிரச்சனையென்று அறிந்து கொள்வார்கள், அதனால் அது வெட்கமாகி விடுமே என்பா ர்கள். கருப்பொருளாவது, இன்றைய நாட்களிலே பலர், உபதேசத்தின் கருப்பொருளை நோக்கிப் பார்க்காமல், போதர்கள், மூப்பர்கள் எப்படி உபதேசிக்க வேண்டும் என்னும் முறைமைகளிலே அதிக கவனம் செலு த்துவதால், உபதேசத்தை கேட்பதற்கு பதிலாக, தாங்களே உபதேசம் செய்கின்றவர்களுக்கு உபதேசிக்கின்றவர்களாக மாறிவிடுகின்றார்கள். இதனால் தங்கள் வாழ்வில் குறைகளை அறிந்து கொள்ளாமல் உணர் வற்றுப் போய்விடுகின்றார்கள். பிரியமானவர்களே, உங்கள் வாழ்வின் காலம் கடந்து செல்வதற்கு முன்னதாக, வேத வார்த்தையின் வெளி ச்சத்திலே ஆராய்ந்து பார்த்து, வேதனை உண்டாக்கும் வழிகளைவிட்டு விலக கற்றுக் கொள்ளுங்கள். சத்திய ஆவியாவனர்தாமே உங்களுக்கு துணை நின்று உதவி செய்வார்.

ஜெபம்:

நித்திய வாழ்வுக்கென்று என்னை அழைத்த தேவனே, நான் என் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடாமல், என்னை ஆராய்ந்து உம்மிடம் திரும்ப உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:23-24