புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 20, 2024)

உலகத்தினால் உண்டாகும் அழைப்புக்கள்

ரோமர் 12:2

நீங்கள் இந்தப்பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்


ஒரு ஊரின் இருந்த ஐசுவரியமுள்ள வியாபாரியொருவன், அந்த ஊரின் கடற்கரை அருகிலே, பல களியாட்டங்களும், விளையாட்டுக்களும் நிறை ந்த, பெரிதான உல்லாசப் பூங்கா ஒன்றை கட்டினான். பல இடங்களிலி ருந்து அந்தப் பூங்காவிற்கு ஜனங்கள் திரண்டு வந்தார்கள். ஆனாலும், வார இறுதிநாட்களிலே, ஊரிலே வாழும் மக்களில் அதிக படியா னோர், காலை ஆலயத்திற்கு செல்ல வேண்டியிருந்ததால், அந்த பூங்காவின் இலாபமானது, அந்த வியாபாரியானவன் எதிர்பார்த்த தைவிட மிகக் குறைவாகவே இருந்தது. இந்த குறைவை ஈடு செய்வ தற்கு என்ன செய்ய முடியும் என, அந்த வணிகத்தின் பிரமுகர்கள் கலந்தாலோசித்தார்கள். அங்கிருந்து பிரமுகர்களில் ஒருவன், அவர்க ளை நோக்கி: அந்த பூங்காவின் தங்கும் விடுதிகளுக்கு அருவிலே ஒரு ஆலயத்தை நிறுவுங்கள். வார இறுதிநாட்களிலே, காலையிலே நேரத் தோடு, அங்கே ஆராதனைகளை வைக்க ஒழுங்கு செய்யுங்கள். அப் போது, ஜனங்கள் வந்து, ஆலயத்திற்கு சென்று, பின்னர் பூங்காவிற்கு வருவார்கள் என்று கூறினார். அந்த ஆலோசனை, வியாபாரிக்கு மிக வும் ஏற்புடையதாக இருந்ததால், உடடினயாக அந்த திட்டத்தை அமுல் படுத்த ஏற்பாடு செய்தான். எப்படி அதை செய்தான்? நாங்கள் உல்லா சத்துறையில் மட்டுமல்ல, ஊர் ஜனங்களின் சேமநலத்தையும் கருதி, ஒரு ஆலயம் நிறுவுவதற்காக பெருந்தொகையான பணத்தை முதலீடு செயகின்றோம் என்று விளம்பரப்படுத்தினான். அந்த ஊரில் வாழ்ந்து கணிசமான ஜனங்களுக்கு அந்த திட்டம், மிகவும் வரவேற்புக்குரியதாக இருந்தது. சிறுவர்கள், வாலிபர்கள், காலை ஒரு மணிநேர ஆராத னைக்கு பின்னர், அந்நாளை மிகவும் களிப்புடன் கழித்தார்கள். அந்தப் போக்கிலேயே செல்ல ஆரம்பித்தார்கள். பிரியமானவர்களே, இந்த உலகமும், உலகத்திற்குரியவைகளும் போகின்ற போக்கை நீங்கள் நன்கு அறிந்திருக்கின்றீர்கள். அவர்களுடைய இலக்கு என்ன என்ப தையும், உங்களுடைய இலக்கு என்ன என்பதையும் மறந்து போய் விடாதிருங்கள். உங்கள் விசுவாச வாழ்க்கைக்கு ஆதரவாக இருக்கின் றோம் என்று உலகம் உங்களை அழைக்கும் போது, மதியற்றவர் களைப்போல அதற்கு உடன்படாதிருங்கள். வாழ்வு உண்டு என்று உலகம் கூறும் போது, அது வஞ்சமான அழைப்பு என்பதை வேதம் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது? ஓளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது?

ஜெபம்:

என் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகும்படி அழைத்த தேவனே, இந்த உலகத்தின் நன்மையாக தோன்றும் வஞ்சகமான திட்டங்களுக்கு நான் உடன்படாதிருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:13-14