புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 19, 2024)

நாம் நிற்க வேண்டிய இடம்

1 யோவான் 5:19

நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழு வதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திரு க்கிறோம்.


முன்னொரு காலத்திலே, ஒரு ஊரின் அயலில் சிறுவர்கள் தங்கள் வீட் டின் பாதையருகே பந்தடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். வீட்டி லிருந்கும் பெற்றோர், பெரியோர், அவர்களை மேற்பார்வை செய்து கொள்ளக்கூடிய தூரத்திலேயே அவர்கள் விளையாடிக் கொண்டிருந் தார்கள். இதைக் கண்ட, தெருவின் அப்புறத்திலுள்ள மனிதனொருவன், அவர்கள் பெற்றோரிடம் வந்து, அவ ர்களை நோக்கி: என்னுடைய வீட்டின் பின்புறத்திலே செப்பனி டப்பட்ட மைதானம் உண்டு. சிறு வர்கள் விட்டுவீதியாகவும், பாது காப்பாகவும் அங்கே விளையாடிக் கொள்ளலாம். நான் அவர்களை பார்த்துக் கொள்வேன் என்று கூறி னான். அதற்கு பெற்றோர்கள், அந்த மனிதனானவனை நோக்கி: உங்கள் கரிசணைக்கு நன்றி, ஆனால், பிள் ளைகள் எங்கள் மேற்பார்வையின் கீழ் இருப்பதையே நாங்கள் விரும்பு கின்றோம் என்று தயவாக கூறி அந்த மனிதனை அனுப்பி வைத்தார் கள். ஏனெனில், அந்த மனிதனானவன், சிறுவர்களை கவர்ந்து கொண்டு, தனக்கு ஆதாயம் உண்டாகும்படிக்கு, பின்னர் சிறுவர்களை தவறான பழக்கவழங்கங்களுக்கு நடத்துகின்றவன் என்பதை அறிந்திருந்தார்கள். நித்திய ஜீவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்ட தேவ பிள்ளைகளே, இந்த உலகம் தரும் கவர்சியும்;, நலமிக்கத்தைப்போல தோன்றும் காட்சிகளும், பெற்றோர் பெரியோருடைய பார்வைக்கு புறம்பே இருக்கும் செப்பனி டப்பட்ட மைதானம் போலிருக்கும். அங்கே சில விசுவாசிகள் கூறும் பாவ மற்ற பொழுதுபோக்குகளை நிறைவேற்ற தகுந்த இடமாக தோன்றலாம். ஆனால், ஒரு விசுவாசியானவன் இந்த உலகத்திலே வாழ்வதன் பிரதா னமான நோக்கம் தன்னுடைய பொழுதுபோக்குகளை நிறைவேற்றி முடி ப்பதற்காக இல்லை என்பதை நன்றாக அறிந்திருக்க வேண்டும். மேலே கூறப்பட்ட சம்பவத்திலே, அந்த மனிதனானவன், சிறுவர்களை ஏன் அழை த்தான்? அதுபோலவே, இந்த உலகமானது நம்மை அழைக்கின்றது. நித்திய ஜீவனை கொடுக்கும்படிக்கு அல்ல மாறாக, நித்திய மரணத் திற்கு நம்மை நடத்தவே அது அழைப்பு விடுகின்றது. எனவே, இந்த உலகம் தரும் கல்வி, உறவு, நட்பு, உல்லாசம் என்பவைகளைக் குறித்து எச்சரிக்கையுள்ளவர்ளாக இருங்கள். நீங்கள் எப்போது, உங்கள் மைதா னத்தைவிட்டு வெளிலே புதிய மைதானத்திற்கு செல்கின்றீர்களோ, நீங்கள் புதிய மைதானத்தின் சட்டதிட்டங்களின்படியே நடக்க வேண்டும் என்பதை மறந்து விடாதிருங்கள்.

ஜெபம்:

என்மீது அன்புகூர்ந்த தேவனே, நான் இந்த உலகத்தின் மாயைக்குள் சிக்கிவிழாதபடிக்கு, எப்போதும் உம்முடைய சத்தத்திற்கு செவி கொடுக்கின்றவனாக வாழ எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 யோவான் 5:4