தியானம் (ஆவணி 18, 2024)
தேவனுக்கு பிரியமான ஆராதனை
எபிரெயர் 12:14
பரிசுத்தமில்லாமல் ஒருவ னும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
அக்காலத்திலே தேவனாகிய கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜன ங்கள், எகிப்திலே அடிமைத்தனதுக்குள்ளாக்க பட்டிருந்தார்கள். தேவனு டைய முன்குறித்த காலம் வந்த போது, தேவனுடைய தாசனாகிய மோசே வழியாக தம்முடைய ஜனங்களை விடுதலையாக்க சித்தம் கொண்டார். மோசேயானவன், கர்த்தர் தனக்கு கற்பித்தபடியே, எகிப்தின் ராஜாவா கிய பார்வோனிடத்திற்கு சென்று தேவனாகிய கர்த்தருக்கு ஆரா தனை செய்ய தேவ ஜனங்களை அனுப்பி விடு என்று கூறினான். பார்வோன் மோசேயை நோக்கி: நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு எகிப்து தேசத்திலேயே பலியிடுங்கள் என் றான். பிரியமானவர்களே, பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது. அப்படியானால், பார்வோன் கூறியதைப் போல அவர்கள் அடிமை களாக இருக்கும் எகிப்திலேயே ஆராதனை செய்தால் என்ன? மோசே பார்வோனை நோக்கி: அப்படிச் செய்யத்தகாது. எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் இந்தத் தேசத்தின் அருவருப்பை பலியிடுகிறதா யிருக்குமே. நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயா ணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்குப் பலியிடுவோம் என்றான். ஆம், அருமையான சகோதர சகோதரிகளே, நம்முடைய விருப்பப்படியல்ல, மற்றவர்களை பிரியப் படுத்தும்படி யல்ல, தேவனாகிய கர்த்தக்கு சுகந்த வாசனையான துதி ஆராத னையை நாம் ஏறெடுக்க வேண்டும். இந் நாட்களிலே, நாங்கள் ஆரா தனை செய்கின்றோம் என்று, பலர் பலவிதமாக ஆராதனையை நடப் பிக்கின்றார்கள். அன்றைய நாட்கள் பழைய ஏற்பாட்டின் காலம், இது புதிய ஏற்பாட்டின் காலம் என்று கூறிக் கொள்கின்றார்கள். அது உண்மை. அப்படியானால், பழைய ஏற்பாட்டின் காலத்திலே அருவருப் பானவைகளை தேவனுக்கு பலியிட்டு ஆராதிக்க முடியாது. புதிய ஏற் பாட்டின் நாட்களிலே அருவருப்பானவைகளை செய்து ஆராதிக்க கூடுமோ? நாம் கிருபையினாலே பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை, நம் முடைய ஆசை இச்சைகளை நடப்பித்து, அதை நியாயப்படுத்து வதற்கு பயன்படுத்தலாகாது. தேவனை ஆராதிக்கின்றவர்கள் பயபக்தி யோடு, 'தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளு கிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள் ளவேண்டும்' எனவே நாம் பரிசுத்தத்தின் அலங்காரத்தோடு தேவனை ஆராதிப் போமாக.
ஜெபம்:
அந்தகார இருளிலிருந்து ஆச்சரியமான ஒளிக்கு என்னை வரவ ழைத்த தேவனே, சுயாதீனமுள்ளவனென்று நான் விரும்பிய பிரகாரமாக உம்மை ஆராதிக்காமல், பயபக்தியோடு ஆராதனை செய்ய வழிடநத்துவீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 4:24