புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 17, 2024)

தானாய் கனி கொடுக்க முடியாது

யோவான் 15:4

நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.


ஒரு பண்ணையின் சொந்தக்காரனானவன், பண்ணையின் பின்புறத் திலே, ஒரு உயர் ரக பலா மரத்தை கன்றொன்றை நட்;டு, பண்ணிலுள்ள ஆடு மாடுகள், அந்த கன்றை மேய்ந்துவிடாதபடிக்கு, பாதுகாப்பின் வேலியைப் போட்டு, நீர் பாய்ச்சி, காலத்திற்திற்கு ஏற்றபடி, அதற்கு பசளை போட்டு, அதை நன்றாக பராமரித்து வந்தான். அந்தக் கன்று மரமாக வளர்ந்து, மிகவும் சுவை யான கனிகளை கொடுத்தது. அந்த மரமானது, அது கொடுக்கும் நற் கனிகளை குறித்து மற்ற மரங்க ளோடு பெருமையாக பேசிக் கொண்டதாம். என்னைப் பார், என் வளர்ச்சியைப் பார், நான் கொடுக்கும் கனிகளின் சுவைத்த மனிதர்கள் சந்தோஷத்தைப் பார் என்று தன் சாதனைகளைக் குறித்து மேன்பாரட்டியது. பிரியமான சகோதர சகோதரிகளே, அந்த மரமானது சுவையான கனிகளை கொடு த்தது உண்மை. ஆனால் அது தானாக வளர்ந்து, தன்பாட்டிற்கே அப்ப டியான கனிகளை கொடுத்ததா? தோட்டத்து சொந்தக்காரன் அதை அல்லும் பகலும் பராமரித்து வந்தான் அல்லவோ? இன்று சில விசு வாசிகள் தாங்கள் செய்த நற்கிரியைகளைக் குறித்து மேன்மை பாரா ட்டிக் கொள்கின்றார்கள். செய்த நன்மைகளுக்கு கைமாறு எதிர்பார் க்காவிடினும், பலர் முன்னிலையில் தாங்கள் இன்னாருக்கு செய்த நன்மைகள் எத்தனையோ, அந்த நன்மைகளாலேதான் அவர்கள் இன்று இப்படி வாழ்கின்றார்கள் என்று தங்கள் கிரியைகளை, தங்கள் சாத னைகளாக பேசிக் கொள்கின்றார்கள். அவர்கள் அதற்குரிய பலனை அடைந்து தீர்ந்தாயிற்று. நாம் அப்படியிருக்கலாகாது. நாம் கர்த்தர் முன்னிலையில் நம்மைத் தாழ்த்தி, அப்பிரயோஜனமான பாத்திரங்க ளாகிய நம்மையும் ஒரு பொருட்டாக எண்ணி, கருவியாக பயன்படுத்தி வருகின்றதற்காக கர்த்தருக்கு மனதார நன்றி செலுத்த வேண்டும். 'ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசு வுக்குள் சிருஷ;டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆய த்தம்பண்ணியிருக்கிறார்.' ஒருவேளை நன்மையை பெற்றவர்கள், தங் கள் நன்றியைத் தெரிவிக்கும்படி நம்முடைய நற்கிரியைகளை குறித்து மேன்மையாக பேசிக் கொண்டாலும், நாம் தேவன் முன்னிலையில், எப்போதும் நம்மை தாழ்த்தி, தொடர்ந்தும் அவருடைய கரத்தின் கருவி யாக காணப்பட வேண்டும்.

ஜெபம்:

செய்கையையும் மன விருப்பத்தையும் என்னில் உண்டு பண்ணும் தேவனே, உம்மால் அன்றி நான் ஒன்றும் செய்ய முடியாது என்ற சத்தியத்தை உணர்ந்து, மனத்தாழ்மையோடு பணி செய்ய கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 2:10