புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 15, 2024)

மனதார நன்றி செலுத்துங்கள்

கொலோசெயர் 3:15

நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்


ஊரிலுள்ள ஒரு மனிதனானவன், பல ஆண்டுகளுக்கு முன்னதாக, ஒரு விசுவாசியானவனின் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து, அவனைக் விடுவித்து, அவனுக்கு நன்மை செய்தான். பல ஆண்டுகள் கடந்து சென்ற பின்னர், அந்த விசுவாசியானவன், ஏதோ ஒரு காரணத்திற்காக, அந்த மனிதனானவனை நோக்கி: 'நீ அன்று, பெரிதாக என்ன செய்தாய்? ஒரு அற்மான பண உதவியைத்தானே செய்தாய், அன்று நீ இல்லையென் றால், தேவன் இன்னுமொருவரை அனுப்பியிருப்பார்' என்று பலர் முன்னிலையிலே தனக்கு உதவி செய்த மனிதனானவனை கடிந்து கொண்டான். பிரியமான சகோதர சகோதரிகளே, அந்த விசுவாசியானவன், முதலாவதாக, தன் இருதயத்தை நல்ல பொக்கிஷத்தால் நிரப்பி வைக்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது, அவன் வாயிலிருந்து நன்மையான வார்த்தைகளே புறப்படும். அத்தோடு அவன் நன்றியறிதலுள்ளவனாகவும் இருப்பான். நாம் ஒரு மனிதனிடம் நன்மையை பெற்றுக் கொள்வதால், எல்லாவற்றிலும் நாம் அவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது கருப்பொருளல்ல. ஒருவனிடம் நன்மையை பெற்றுக் கொண்டதால், நாம் அவன் செய்யும் தீமைகளுக்கு இணங்க வேண்டிய அவசியமும் இல்லை. அவனுக்காக நாம் பொய் சொல்ல வேண்டியதும் இல்லை. ஆனால் எல்லா சூழ்நி லைகளிலும் நம்முடைய வாயின் வார்த்தைகள் கிருபை பொருந்திய தாக இருக்க வேண்டும். ஒருவன் நன்மை செய்ய அறிந்திருக்கும் போது, அவன் அதை செய்யாதிருந்தால், தேவன் வேறொரு வழியை வைத்தி ருப்பார் என்பது உண்மை, அதனால், ஒருவரிடம் நாம் நன்மையை பெற்ற பின்பு, அதை மறுபதலிப்பது நமக்கு தகுதியாக இருக்காது. ஒருவேளை, நன்மை செய்தவன், கைமாறு கருதி, தான் செய்த நன் மையை குறித்து தாரை ஊதுவிக்கலாம். அதாவது, இத்தனையாம் ஆண்டு, இவருக்கு நான் இன்னது செய்தேன். அவனுக்கு நான் அப்படி செய்தேன் என்று பலர் முன்னிலையில் தான் மற்றவர்களுக்கு செய்த நன்மைகளைக் குறித்து பேசிக் கொள்ளலாம். அப்படி செய்கின்றவன் தனது பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே நான் உங்களு க்கு சொல்லுகின்றேன் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கி ன்றார். எனவே, உங்கள் கைமாறு பரலோகத்தில் பெரிதாக இருக்கும் படி நீங்கள் பெற்றுக் கொண்ட நன்மைகளுக்காக, மனிதர்களுக்கும், தேவனுக்கும் மனதார நன்றியறிதலுள்ளவர்களாக இருங்கள். எந்த சூழ்நிலையிலும் தேவ சமாதானத்தை இழந்துவிடாதபடிக்கு, கிறிஸ்து வின் வசனம் உங்கள் மனதிலே நிலையாய் தரித்திருப்பதாக.

ஜெபம்:

என்னை உமக்கென்று தெரிந்த கொண்ட தேவனே, நீர் எனக்கு அனுப்பி வைத்த நன்மைகளை நான் ஒரு போதும் மறந்து போகாமல், மனிதர்களுக்கும், உமக்கும் நன்றியுள்ளவனாக இருக்க கிருபை செய்வீராக. இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:1-4