தியானம் (ஆவணி 14, 2024)
நன்மையானவைகளை கற்றுக் கொடுங்கள்
கலாத்தியர் 6:7
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
ஒரு ஊரிலிருந்த சனசமூக நிலையத்தினால், அந்த ஊரின் வருடாந்த திருவிழா நடாத்தப்;பட்டது. அந்த விழாவின் முதலாம் நாளின் பெற்ற இராத்திரியிலே, அங்கிருந்த நிர்வாக உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தாரும், அடுத்த நாளுக்குரிய ஆயத்தங்களை செய்து கொண் டிருந்தார்கள். அந்த வேளையிலே, ஒரு சிரேஷ;ட நிர்வாக உறுப்பினரது, மகனானவன், அங்கிருந்த மேளமொன்றை பலத்த சத்தமாக அடித்துக் கொண்டிருந்தான். அதைக் கண்ட ஊரின் மூப்பரொருவர், அவன ருகே சென்று, தம்பி, நேரம் பதி னொருமணியாகிவிட்டது, ஊர் ஜன ங்கள் உறுங்குகின்ற வேளை. என வே, நீ இந்;த மேளத்தை அடிப்பதை நிறுத்திவிடு என்று அவனை தடுத்து நிறுத்தினார். அந்த வாலிபனும், அரைமனதோடு அதை நிறுத் திவிட்டு சென்று விட்டான். அதைக் தூரத்திலிருந்து கண்ட பெற்றோர், மகனை அழைத்து, அந்த மனிதனின் சொல்லை கேட்க நீ யார்? உன் னை கட்டுப்பத்த அவன் யார்? நீ போய் மறுபடியும் மேளத்தை அடித்து பயிற்சி செய் என்று அவனை தூண்டி விட்டார்கள். வைத்தார்கள். அவன் மறுபடியும் சென்று மேளத்தை அடிப்பதை கண்ட மற்றய நிர்வாக உறு ப்பினரும், ஊரின் மூப்பர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். பிரியமான வர்களே, சனசமூக நிலையத்தின் முக்கிய பொறுப்பிலுள்ள பெற்றோர், தங்கள் மகனானவனுக்கு, எப்படி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை கற்று கொடுத்தார்கள் என்பதை பாருங்கள். அந்த பெற்றோரானவர்கள், சொட்டுச் சொட்டாக மதகுகள் வழியாக வடிந்து கொண் டிருக்கும் தண்ணீரை, அடைத்துக் போடும்படிக்கு கிரியைகளை நடப்பிக்காமல், கசிந்து கொண்டிருக்கும் தண்ணீர் ஊரிலே வெள்ள மாகும்ப டிக்கு, மதகுகளை திறந்து விடுகின்ற மனிதர்களுக்கு ஒப்பாக இருந்தா ர்கள். பிரியமானவர்களே, கிறிஸ்துவின் சிந்தையை தரிக்கு ம்படிக்கு அழைப்பைப் பெற்ற நீங்கள், உங்கள் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக் கும் உங்கள் வாழ்வியல் நடைமுறை வழியாக எதைக் கற்று கொடுகி ன்றீர்கள். சிறுக விதைக்கின்றவன் சிறுக அறுப்பான் என்கின்ற உண்மை யை மறந்து போய்விடாதிருங்கள். ஒருவன் நன்மையை விதைத்தால், அதை பன்மங்காக அறுப்பான். ஒருவன் தீமையை விதைத்தால், அதை அவன் பன்மடங்காக அறுப்பான். 'சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்து விடு கிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்பு முன் அதை விட்டு விடு' என்கின்ற பிரகாரம், குறைகளை அனல்மூட்டி எரியவிடும்படியல்ல, குறை வுகளில் நிறைவாயிருக்க அழைக்கப்பட்ட நீங்கள், நிறைவானவைகளை நாடி அவைகளையே மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுங்கள்.
ஜெபம்:
அழியாத நித்திய ராஜ்யத்திற்காக என்னை அழைத்த தேவனே, என் வாழ்வின் நோக்கத்தை நான் மறந்து போய்விடாமல் எப்போதும் விழிப்புள்ளவனாக வாழ உணர்வுள்ள இருயதத்தை தந்து வழிநடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - நீதிமொழிகள் 17:14