தியானம் (ஆவணி 13, 2024)
செய்து காண்பியுங்கள்
நீதிமொழிகள் 22:6
பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
இந்த பூமியிலே ஒரு பிள்ளையானது பிறந்த நாளிலிருந்து, நன்மையை விரும்பும் பெற்றோர், ஆசிரியர், ஊழியர், பெரியோர் யாவரும், நல மான காரியங்களை பிள்ளைக்கு கற்றுக் கொடுகின்றார்கள். நாள டைவிலே பிள்ளையானது கற்கும் காரியங்கள் யாவும் அந்தப் பிள் ளையின் பழக்கமாகிவிடுக்கின்றது. பாடசாலைக்கு ஒழுங்காக செல்லு தல், ஆலயத்திற்கு தவறாமல் செல்லுதல், ஆலயத்திலே தேவ ஊழியங்களில் உதவி யாக இருத்தல், இப்படியாக பற்பல நற்பழக்கவழக்கங்க ளையுடையவர்களாக பிள்ளை களை பெற்றோர் வளர்த்து வருகின்றார்கள். இவைகளு டன் தரித்து நின்றுவிடாமல், இவைகள் ஏன் செய்கின்றோம் என்ப தையும், அதன் கருப்பொருளையும், பெற்றோர், ஆசிரியர, ஊழியர் பெரியோர், பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியமா னது. அதாவது, பாடாசலைக்கு ஏன் செல்கின்றோம்? பாடங்களை படி த்து தேர்ச்சியடையும்படிக்காக செல்கின்றோம். அதன்பின்னர், தேர்ச் சியதைவைகளை நாளாந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண் டும். ஆலயத்திற்கு ஏன் செல்கின்றோம்? தேவனுடைய அநாதி தீர்மானம் நம்முடைய வாழ்வில் நிறைவேறும்வரைக்கும், அவரை ஆராதித்து, தேவ வார்த்தைகளை கேட்டு கற்றுக் கொள்வதற்காகவே செல்கின் றோம். அதன்பின்னர், கற்ற வார்த்தைகளை, பிள்ளைகள் கைகொள்ளு ம்படி க்கு, பெற்றோர் அவர்களை அந்த வழியிலே நடத்தி, தங்கள் வாழ் விலே அவைகளை நடைமுறைப்படுத்திக் காண்பித்து, அவற்றை பிள் ளைகளின் பழக்க வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட் டாக, ஆலயத்திலே சென்று 'நன்றியறிதலுள்ளவர்களாக இருங்கள்' என் பதை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கின்றோம். ஒருவர் பிள்ளைக்கு பரிசுப்பொருளை கொடுக்கும் போதோ, அல்லது ஒருவர் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக நற்கிரியைகளை செய்யும் போதோ அதற்கு நன்றி கூறக் கற்றுக் கொடுக்க வேண்டும். பின்பு, அந்தக் கிரியைகள் எவ்வ ளவு சிறிதாக இருந்தாலும், வாழ்க்கையின் நடைமுறையல் அதைக் குறி த்து நன்றியறிதலுள்ளவர்களாக இருக்கும்படி பயிற்சிவிக்க வேண்டும். இப்படியாக, மன்னிப்பு வழங்க, மன்னிப்பை கேட்டு பெற்றுக் கொள்ள, பெரியோருக்கு கீழ்படிவுள்ளவர்களாக இருக்க, நீடிபொறுமையுள்ளவர்க ளாக, பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் வாழ்க்கையில் முன் உதாரணமாக இருந்து கற்றுக் கொடுக்க வேண்டும்.
ஜெபம்:
மறுரூபமாகும்படிக்கு என்னை அழைத்த தேவனே, உம்முடைய அநாதி தீர்மானம் என் வாழ்வில் நிறைவேறும்படிக்கு கற்றவைகளை என் வாழ்வில் நான் கடைப்பிக்க என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ரோமர் 12:2