தியானம் (ஆவணி 11, 2024)
வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கையின் ஆரம்பம்
மத்தேயு 12:35
நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக் காட்டுகிறான்
ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்து வந்த மனிதனானவன், தன் வீட்டிலே நண்பர்கள், உறவினர்கள் மத்தியிலே பேசும் போது, மற்றவர்களு டைய ஊரையும், அதன் வழக்கங்களையும் சொல்லி, பேசுவது அவனுக்கு வழக்கமாக இருந்ததால், நாளடைவிலே அது அவனுடைய பழக்க மாயிற்று. வெளியே செல்லும் போது, மற்ற மனிதர்கள், விசுவாசிகள் முன்னதாக, அவன் தான் வீட்டிலே பேசுவதைப் போல பேசாமல், யோக்கியமானதை பேசி வந் தான். ஆனால், ஒரு நாள், பல மனிதர்கள் கூடியிருந்த விருந்தொன்றிலே, ஏதோ காரணத்திற்காக, இன்னுமொரு விருந்தாளி யுடன் அவனுக்கு கருத்து முரண் பாடு ஏற்பட்டு, அது வாக்குவாத மானபோது, தன்னையறியாமலே, அவன் வாயிலிருந்து ஊரையும், வழக்கங்களையும் குறிதத காரியங்கள் வெளிப்பட்டது. அவன் அதைக்க கட்டுபடுத்துவதற்கு முன்னதாக அந்த வார்த்தைகள் சென்று, செய்யவே ண்டிய பாதகமான விளைவுகளை செய்து முடிந்து விட்டது. தேவனுக் கென்று வேறு பிரிக்கப்பட்ட சகோதர சகோதரிகளே, வேறு பிரிக்கப்ப ட்ட வாழ்க்கையானது எங்கே ஆரம்பிக்க வேண்டும்? அது உங்கள் வீட்டில் ஆரம்பிக்க முன்னதாக, உங்கள் மனதிலே ஆரம்பிக்க வேண் டும். பழைய மனுஷனுக்குரிய மோசம் போக்கும் சிந்தையும், பேச்சும், அதைக் குறித்த ஆசையும், முற்றாக உள்ளத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். வீட்டிலே எதையும் பேசுவதற்கு உங்களுக்கு உரிமையிரு க்கலாம். ஆனால், 'உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணி னால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.' இருதயத்தின் நிறைவி னாலே வாய் பேசும். எனவே, இருதயத்தை தேவ வசனங்களினால் நிறைத்து வைக்க பழகிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டிலும், வெளியி லும், உங்கள் மனதிலும் உங்கள் பேச்சு தேவ வசனத்தின்படி தூய்மையுள்ளதாக இருப்பதாக. அப்படி செய்யும் போது, மனக்குழப்பங்கள் ஏற்படும் போதும், தேவனுடைய வார்த்தையே உங்கள் வாயிலிருந்து புற ப்படும். பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல் லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். 'மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவி க்கவேண்டும்' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார்.
ஜெபம்:
என்னை வேறுபிரித்த தேவனே, உமக்கேற்றவைகளை சிந்தித்து உமக்கேற்றவைகளை நான் வீட்டிலும் வெளியிலும், என் மனதிலும் பேச பழகிக் கொள்ளும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 141:3