புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 10, 2024)

தேவ நீதி வெளிப்படும்

சங்கீதம் 27:14

கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.


சவுல் என்னும் ராஜாவானவன், தேசத்தை ஆளும்படிக்கு தேவனால் நியமிக்கப்பட்டிருந்தான். தேவ ஊழியராகிய சாமுவேல், தேவனுக்கு பலிகளை செலுத்தும்படி தேவனால் நியமிக்கப்பட்டிருந்தார். ஒரு சமயம், தேவ மனுஷனாகிய சாமுவேல் வரத் தாமதமாகின்றது என, காத்திருக்க மனதில்லாதவனாய், தேவ ஊழியரால் செய்யும்படி நிய மிக்கப்பட்ட சர்வாங்கதகனபலியைச் சவுல் ராஜாவானவன், தான் செய்யத் துணிந்தான். தேவனுக்கு பலி களை செலுத்துவது நன்மையான காரியமாக இருந்தபோதும். தேசத்தின் ராஜாவானவன், தேவனுடைய ஒழுங்கை மீறி, தானே பலி செலுத்தும்படி துணிகரம் கொண்டான். அவன், தான் பலி செலுத்துவது தேவனுக்கு பிரியமான காரியம் என்று எண்ணினான், ஆனால், அவனுடைய பலியிலே, மீறுதலும், துணி கரமும் இருந்ததால், தேவன் அந்த பலியின்மேல் பிரியமாக இருக்கவில்லை. வீட்டிலே, வேலையிலே, கல்விநிலையங்களிலே, கடைத் தெரு க்களிலே, சமூகத்திலே, ஊரிலே, தேசத்திலே, உலகத்திலே எங்கும் பிரச்சனைகளும், ஒழுங்கின்மைகளும் உண்டு. அவை யாவும் மனிதர்க ளால் ஏற்படுத்தப்பட்டவைகள். அவ்வண்ணமாகவே விசுவாசிகள் சபை ஐக்கியத்தில் கூடிவரும் போது, அவ்வப்போது, கருத்து முரண்பாடுக ளும், வாக்குவாதங்களும், சண்டைகளும், பிரவினைகளும் ஏற்படுகின் றது. இது தேவனுடைய ஆவியினாலே உண்டாகின்ற காரியமல்ல. மாறாக, விசுவாசிகள் தேவனுடைய வேளைக்கும், அவர் நியமித்த ஒழு ங்குக்கும் காத்திருக்க மனதில்லாமல், தங்கள் சொந்த மாம்ச இச்சை களின்படி பிரச்சனைகளை தீர்க்க அணுகும் போது, அங்கே கலகங் களே ஏற்படுகின்றது. சபைக்கு நன்மை செய்கின்றோம், நீதியை நடப்பி க்கின்றோம் என்று எண்ணி மாம்சத்திலே செயற்படுகின்றவர்கள், தேவ நீதிக்கு எதிர்த்து நிற்கும்படி தங்களை பழக்கப்படுத்திக் கொள்கின் றார்கள். பிரியமானவர்களே, தேவனுடைய சபையை குழப்பும்படி, உங்களோடு ஒரு கூட்டம் சேரந்திருந்தாலும், தேவனுடைய சபையை குழப்பதற்கு காரணராயிருந்தால், அது தேவனுடைய பார்வையிலே பிரியமாயிருக்குமோ? அருமையான சகோதர சகோதரிகளே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபி க்கிறதற்குத் தாமதமாயும் இருக்க பழகிக் கொள்ளுங்கள். தேவ நீதி நிறைவேறும்வரை காத்திருக்க பழகிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, என் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் என் ஆத்துமாவை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற உம்முடைய வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுகொள்ள எனக்கு கற்றுத் தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 62:1-5