புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 09, 2024)

காத்திருக்க பழகிக்கொள்ளுங்கள்

ஏசாயா 40:31

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழு ம்புவார்கள்


திருமணமாகிய தம்பதிகள், கணவன் மனைவியாக, ஓர் இடத்திலே சேர் ந்து வாழாமல், வெவ்வேறு இடங்களிலே வாழ்ந்து கொண்டு, நாங்கள் ஒற்றுமையாக, ஒருமனமாக இருக்கின்றோம் என்று கூற முடியுமோ? அவர்கள் ஒன்றாக வாழும் போது, அவர்களுக்கிடையிலே ஏற்படும் கருத்து முரண்பாடுகள், வேற்றுமைகள் யாவையும், வேத வார்த்தைகளி ன்படி மேற்கொண்டு, ஒருவரை ஒருவர் அறிகின்ற அறிவிலே வளர்ந்து, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடு த்து, ஒருவர் பெலவீனத்த்திலே மற் றவர் பெலனாய் இருந்து வாழும் போதே, அவர்கள் இருவரும் இசை ந்த ஆத்துமாக்களாய் இருப்பார்கள். சபையிலே ஒன்றாய் கூடி ஜெபிக்க மனதில்லாமல், நான் வீட்டிலே தனியே ஜெபிப்பேன் என்று கூறுப வன், ஏகசிந்தை, ஒருமனம், ஐக்கி யம் என்பவற்றைக் குறித்து எப்படி அறிந்து கொள்வான். அவன் ஏற்கனவே பிரிவினையுடையவனாக இருப்பானல்லவா. கணவன் மனைவிக்கிடையில் கருத்து முரண்பாடுகள் சபையின் விசுவாச மார்க்கத்தாருக்குள் வரும்போது, அவர்கள் என்ன செய்ய முடியும்? சபை கூடுதலை தவிர்த்துக் கொள்ள முடியுமா? சபைக்குச் செல்லாமல் தனியே வீட்டிலி ருந்து கொண்டே ஆராதிப்பது சரியாகுமா? தெரிவுகள் யாவும் அவரவ ருக்குரிய சுதந்திரம். ஆனால், வேதவார்த்தையை மீறி ஒருவன் நடந்து கொண்டு, தான் பிரச்சனைகளுக்கு தப்பி வாழ்கின்றேன் என்று கூறுபவ னாக இருந்தால், அவன் தேவனுக்கு கீழ்ப்படியாமல் இருப்பதற்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்கின்றான். சவால்கள், பிரச்சனைகள், உப த்திரவங்கள் வரும் போது, அவைகளை வேத வார்த்தைகளின்படி தீர் த்து கொள்பவனே தன்னை தேவனுக்கு கீழ்படிந்திக்கும்படி பழக்கப்படுத்திக் கொள்கின்றான். பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு, வேறறொ ருவன் இடையூறாக இருக்ககும் போது, கர்த்தருக்காய் காத்திருக்க தன்னை பழக்கிக் கொள்கின்றவன், தான் வெட்க மடையாதிருக்கவும், இறுதியிலே ஜெயம் கொள்ளவும் தன்னை பழக்கிக் கொள்கின்றான். எனவே, வேத வார்த்தைகளின்படி தன் வாழ்வை வாழ பழகிக் கொள் கின்றவன், வேத வார்த்தைளின்படி, வேத வார்த்தைகளால் வெற்றியடைவான். அதை மீறி நடக்கின்றவன், அவன் கீழ்படியாதவனாக இருப்பதனால், தன்னை தானே தோல்விக்கு பழக்கிக் கொள்கின்றான். நீங்களோ வெற்றி சிறக்கும்படி அழைக்கப்ட்டிருக்கின்றீர்கள். எனவே காத்திருக்க பழகிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, எல்லா சூழ்நிலைகளிலும் நான் உம்முடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, அதன்படி வாழ கற்றுக் கொள்ள எனக்கு ஞானமுள்ள இருதயத்தை தந்து வழி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கின்றேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 10:11