தியானம் (ஆவணி 08, 2024)
படிப்படியான வளர்ச்சி
1 தெச 5:11
ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.
ஒரு விசுவாசியானவனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவர் களில் இளையவன், தனக்கு கிடைக்கும் சில்லறை காசுகளை சிறிது சிறிதாக சேர்த்து, வருட முடிவிலே, நேர்த்தியாக அச்சிடப்பட்ட பரிசுத்த வேதாகம புத்தகத்தை வாங்கிக் கெnhண்டான். மூத்தவனோ, தன் இளை யவனை நோக்கி: வேதாகம புத்தகத்தை வாங்கினால் போதாது, அதை படிக்க வேண்டும் என்று அவனை கடிந்து கொண்டான். ஆர்வத்தோடு அந்த வேதாகம புத்தகத்தை வாங்கிற இளையவன், தினமும் அதை வாசி க்க ஆரம்பித்தான். சில கிழமைக ளாக அதை அவதானித்து வந்த மூத்தவன், தன் தம்பியை நோக்கி: இராப்பகலாக வேத வார்த்தைகளை வாசித்தால் போதாது, அதை நீ கைகொள்ள வேண்டும் என்று அதற்றிக் கூறினான். சில நாட்களுக்கு பின்பு, மூத்தவனின் கூட்டாளியொருவன், அவனுக்குகெதியாரக தீமை செய்ததால், மூத்தவன் மூர்க்;கங் கொண்டு, தன் நண்பனோடு சண்டை செய்ய விரைந்து சென்றான். அதை கண்ட இளையவன், மூத்தவனை நோக்கி: அண்ணா, தீமைக்கு தீமை செய்யாமல், நன்மை செய்ய வேண் டும். அவனை போல நீயும் மாறிவிடாமல், அவனை மன்னித்து விட்டு விடு என்று பணிவாக கூறினான். அதை கேட்ட மூத்தவன், தன் தம் பியின் மேல் மிகவும் கோபம் கொண்டு, நீ எனக்கு போதிக்க ஆரம் பித்து விட்டாயா என்று அவனை கடுமையாக கண்டித்து பேசினான். ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, மூத்தவன் தன் தம்பிக்கு கூறி யது போல, பரிசுத்த வேதாகமம் வீட்டில் பார்வைக்கு இருந்தால் போ தாது, அதை வாசிக்க வேண்டும், பின் வாசித்தவைகளை நாளாந்த வாழ் விலே கைக் கொள்ள வேண்டும் என்பது உண்மை. ஆனால், அவன் தன் தம்பியை ஊக்குவித்து உற்சாகப்படுத்தாமல், இளையவன் செய் யும் நற்கிரியைகளை குறித்து குறைவாகவே பேசிக் கொண்டான். வேத த்தை வாசிக்க, முதல்படியாக வீட்டிலே வேதாகமம் இருக்க வேண்டும், வேத வசனத்தை தியானம் செய்வதற்கு முன் அதை வாசித்து அறிந்தி ருக்க வேண்டும், வேத வார்த்தைகளை வாழ்வில் கைகொள்வதற்கு முன் அதை தியானிக்க வேண்டும் என்பதை மூத்தவன் உணராதிருந் தான். இன்று உங்கள் மனநிலை யாருக்கு ஒத்திருக்கின்றது? நீங்கள் மூத்தவனைப் போலவோ அல்லது இளையவனைப் போலவோ, யாரைப் போல இருக்கின்றீர்கள்? நற்கிரியைகளை செய்வதற்கு மனதார ஒருவரை ஒருவர் ஊக்குவியுங்கள். மற்றவர்கள் கிறிஸ்துவுக்குள் வளர்ந் பெருகுவதற்கு ஒத்தாசையாக இருங்கள்.
ஜெபம்:
என்மேல் நீடிய பொறுமையாக இருந்து வரும் தேவனே, மற்ற வர்ளுடைய அற்பமான ஆரம்பத்தை அசட்டை செய்யாமல், அவர்களை ஊக்குவித்து, உம்மண்மை சேர்க்க நல்மனத்தை தந்து வழிடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபேசியர் 5:19