தியானம் (ஆவணி 07, 2024)
சபை கூடிவருதல்
தானியேல் 6:10
அங்கே தான் முன் செய்து வந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெப ம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.
இந்தப் பூவுலக வாழ்க்கையிலே மனிதர்கள் தாங்கள் அறியாத பல காரி யங்களை சீக்கிரமாக தங்கள் வாழ்விலே பழக்க வழக்கமாக்கிக் கொள் கின்றார்கள். எடுத்துக் காட்டாக, மாணவர்கள் கல்வி கற்கும்படி கிழமை நாட்களிலே அனுதினமும் பாடசாலைக்கு சென்று வருகின்றார்கள். சில நாட்கள் பாடசாலைக்கு செல்வதற்கு மனவிருப்பம் இல்லாதிருக்கும் போதும், பாடசாலைக்கு செல்வதற்கு தங்களை பலவந்தம் பண்ணிக் கொள்கின்றார்கள். ஒருவன் பாட ங்களை ஒழுங்காக முறைபடி கற் பதற்கு, பாடசாலைக்கு ஒழுங் காக செல்வது முதற்படியாக இரு க்கின்றது. சில விதிவிலக்கான சந் தர்ப்ப சூழ்நிலைகளிலே, சில இட ங்களிலே பாடசாலைக்கு செல்ல முடியாத சூழ்நிலைககள் ஏற்படு கின்றது அதுபோல பாடசாலை இல்லாத இடங்கள் இருக்கின் றது. அந்த சூழ்நிலைகளிலே, சிலர் வீட்டில் இருந்து கற்றுக் கொள்கின்றார்கள். அவர்களில் சிலர் தேர்ச்சி யடைந்திருக்கின்றார்கள். ஆனால், அது விதிவிலக்கான சூழ்நிலையாகும். பொதுவாக பாடசாலைக்கு செல்ல விரும்பமில்லாதவன், விதிவில க்கான சூழ்நிலைகளை சுட்டிக்காட்டி, அவைகளை சாட்டுப்போக்காக பேசிக் கொள்வான். பாடசாலைக்கு செல் கின்ற மாணவர்கள் எல்லாரும் ஒழுங்காக கற்று தேர்சியடைவதில்லை. சிலர் தங்களுக்கு கொடுக்கப் பட்ட சந்தர்பங்களை வீணடிக்கின்றார்கள். ஆனால், ஒரு நல்ல மாணவ னானவன் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதை வழக்கமாக்கிக் கொண்டு, அங்கு கற்பிக்கும் பாடங்களை அனுதினமும் மீள்ஆய்வு செய்து கற் பதை தன் வாழ்வின் பழக்கமாக்கிக் கொள்கின்றான். பிரியமான சகோதர சகோதரிகளே, மேற்கூறிய சம்பவத்தைப் போலவே, நாம் முதலாதாக தேவஆலயத்திற்கு செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தேவ ஆலயத்திற்கு செல்வதற்கு சாட்டுப் போக்கு சொல்கின்றர்கள் யார் என்பதை நீங்கள் இப்போது அறிந்திருக்கின்றீர்கள். நீங்கள் வயது, வியாதி, மற்றும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத விதிவில க்கான சூழ்நிலைகளில் இருந்தால், அதை தேவன் அறிந்திருக்கின்றார். ஆனால், நீங்களோ உங்களுக்கென்று விதிவிலக்கான சூழ்நிலைகளை ஏற்படுத் திக் கொள்ளாமல், உங்களுக்கு கிடைக்கும் நல்ல சந்தர்பங்களிலே, தேவ னுக்குரியவைகளை கற்றுக் கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங் கள்.
ஜெபம்:
அன்பின் பரலோக தந்தையே, நற்செயல்களை செய்ய வேண்டிய தெல்லதாவற்றையும் நீர் எனக்கு ஈவாக கொடுத்திருக்க, நான் குறை கூறவதை என் வாழ்வில் வழக்கப்படுத்தாதபடிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபிரெயர் 10:25