புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 06, 2024)

பழக்க வழக்கங்கள்

லேவியராகமம் 20:26

நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன்


ஒரு மனிதனானவன், அதிகாலையிலே எழுந்தவுடன், எதையும் செய்வத ற்கு முன்னதாக, தேநீர் குடிக்கும் பழக்கமுடையவனாக இருந்தான். ஆண்டகள் கடந்து சென்றதும், சில மருத்துவ காரணங்களுக்காக, அந்தப் பழக்கத்தைவிட்டு, அதிகாலையிலே இளம் சூட்டு தண்ணீரை அருந்தும் வைத்தியர் ஆலோசனை கூறினார். அடுத்த நாள் அவன் காலையிலே எழுந்திருக்கும் போது, வழக்கப்படி அவன் தேநீர் தனக்கு தேவை என்று உணர்ந்து கொண் டான். ஆனால், தன் உடல் நலத்தை பேணும்படியாக, மருத்துவ ஆலோ சனையை பின்பற்ற ஆரம்பித்தான். அந்த பழைய பழக்கத்தை மாற்றி, தண்ணீர் அருந்தும் புதிய பழக்க த்தை ஏற்படுத்துவதற்கு, அவனுக்க ஒரு சில மாதங்கள் சென்றது. தேநீர் அருந்தும் பழைய பழக்கம் எப்படி உண்டாயிற்று. ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்திலே அவன் அதை அருந்தி வந்ததால், அவன் மனதும், உடலும் அதற்கு பழக்கப்பட்டுவி ட்டது. அந்தத் தேநீர் இல்லாமல், அவன் நாள் ஒரு நாளாகவே இரு ந்ததில்லை. அதுபோல மனிதர்கள் பழவிதமான பழக்கங்களை தங்கள் வாழ்விலே ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். இன்னுமொருவிதமாக சொல் லுவதென்றால், மனிதர்கள் சில பழக்கங்களுக்கு தங்களை அடிமைக ளாக்கிக் கொள்கின்றார்கள் என்றும் கூறிக் கொள்ளலாம். அதுபோ லவே, கர்த்தருக்கு பிரியமானவற்றை செய்வதில் நாம் நம்மை பழ க்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகாலையிலே எழுந்து ஜெபிப்து பலருக்கு மிகவும் கடினமாக காரியமாக தோன்றகின்றது. ஆனால் இர விரவாக முழித்திருந்து பற்பல காரியங்களை செய்வற்கு தங்கள் உடலை பழக்கப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். எனவே, ஒரு புதிய பழக்கத்தை உருவாக்குவதற்கு, சில பழைய பழக்கங்களை விட்டவிட வேண்டும். பழைய பழக்கங்களிலே சில இன்பங்கள் உண்டாயிருக் கலாம். ஆதலால் விசுவாசிகளும்கூட அதைவிட்டுவிட மனதில்லாதவர் களாகி விடுகின்றார்கள். ஊரோடுகையில் ஒத்தோடு என்ற பிரகாரமாக நாட்டின் நடப்பிற்கு தங்களை வழக்கப்படுத்திக் கொள்கின்றார்கள். பிரி யமானவர்களே, நாம் உலகமாகிய இந்த ஊரிலிருந்து, பரம ஊராகிய பரலோகத்திற்கென்று வேறு பிரிக்கப்பட்டிருக்கின்றோம். எனக்கு பர லோகத்திற்கு இட்டுச் செல்லும் திவ்விய சுபாங்களை உங்கள் வாழ்வில் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அவைகளையே உங்கள் பிள்ளைகளும் நடக்கையிலே கற்றுக் கொடுங்கள்.

ஜெபம்:

அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்த தேவனே, பரலோகத்திற்குரியவை களை நாடும் பழங்கங்களை என் வழக்கமாக்கிக் கொள்ள உணர்வுள்ள இருதத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:9