தியானம் (ஆவணி 05, 2024)
உபயோகமற்ற உடைந்த பாத்திரம்
ஏசாயா 64:8
கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.
ஒரு செல்வந்தனின் வீட்டிலே அழகான இயற்கை மலர்க் கொத்தோடு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த பாத்திரமொன்று கீழே விழுந்ததால், சில இடங்களிலே வெடித்துப் போயிற்று. அதனால், அதி லுள்ள தண்ணீர் வெளியேறியது, ஆகவே, இனி அது உபயோகத்திற்கு உகந்ததல்லவென்று, அந்த வீட்டின் விசாரணைக்காரன் அதை வெளியே எறிந்து விட்டான். அழகான உப யோகமாயிருந்த அந்தப் பாத்திர மானது, தற்போது உடைந்த பாத் திரமாக தெருவின் குப்டித்தொட்டி அருகே வீசப்பட்டிருந்தது. செல்வந்தனின் வீட்டை அழகுபடுத்திய அந்தப் பாத்திரத்தை, தற்போது தெருவழியாக செல்லும் ஏழையும் விரும்பாத பாத்திரமாக மாறிவிட்டது. ஒரு நாள் அவ்வழியாக, தொலைவிலிருந்து ஒரு குயவன் வந்தான். அவன் எறிந்து கிடக்கும் அந்தப் பாத்திரத்தை கண்டு, அதை உற்றுப் பார்த்து, விலைபோகாத அந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு தன் தொழிற்சாலையில், அதை உடைத்து, மறுபடியும், மிக அழுகுள்ள பாத்திரமாக வனைந்தான். குப்பையிலிருந்த ஆகாததென்று கைவிடப்பட்ட பாத்திரம், தற்போது மிக விலையுயர்ந்த பாத்திரமாக குயவனுடைய கையால் மறுபடியும் வனையப்பட்டது. ஆம் பிரியமான சகோ தர சகோதரிகளே, இலாபமுள்ளவரை மனிதர்கள் ஒருவனோடு பிரியமாய் நடந்து கொள்வார்கள்;. ஆனால், அவன் வாழ்க்கையின் நிலைமை மாறி, பின்னடைவுகள் ஏற்படும் போது, ஆகாதவன், பிரயோஜனமற்றவன் என்று அவனை தள்ளிவிடுகின்றார்கள். உண்மையிலே அந்த மனிதனானவன், உடைந்த பாத்திரம் போல, ஒரு ஆகாத நிலைக்கு தன்னை அறிந்தோ அறியாமலோ கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், அப்படியே வாழ்வு முடிந்து விட்டது என்று அவன் தன்னை மாய்த்துக் கொள்ளத் தேவையில்லை. நம்மை உருவாக்கி குயவனாகிய நம்முடைய கர்த்தருடைய கரத்திலே அவன் தன்னை ஒப்புக் கொடுத்தால், களி மண்ணாகிய எங்களை அவர் மறுபடியும் வனைகின்றவராக இருக்கின் றார். உங்களுடைய வாழ்க்கையிலும், தகுந்த காரணங்களால், நீங்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், மனந்தளர்ந்து போகால், கரத்தரை நோக்கி: கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை என்று உங்களை தாழ்த்தி அவரிடம் ஒப்புக் கொடுங்கள். நொருங்குண்ட இருத யத்தை அவர் ஒரு போம் புறக்கணிக்கமாட்டார்.
ஜெபம்:
நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் சமீபமாயிருக்கும் தேவனே, ஒன்றுக்கும் ஆகாத பாத்திரமாகிய என்னுள் உம்முடைய திவ்விய ஒளியை பிரகாசிப்பிக்கப் பண்ணியத்திற்காக உமக்கு நன்றி ஐயா! இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எரேமியா 18:4