தியானம் (ஆவணி 04, 2024)
கூட்டிச் சேர்க்கும் தேவன்
உபாகமம் 30:4
உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார்
ஒரு மனிதனாவன், ஊர், பெயர், தேசம் எது என்று தெரியாதபடிக்கு, பல உபத்திரவங்களால் நெருக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டுப் போனான். அவன் செய்த நற்கிரியைகளுக்கு பலன் இனி இல்லை என்ற அளவி ற்கு, எப்பக்கமும் அவனை சூழ சவால்களும் பிரச்சனைகளும் சூழ்ந்தி ருந்தது. நடுச்சமுத்திரத்திலே கடும் புயலிலே அகப்பட்டு, உதவிக்கு எவ ரையும் அழைக்க முடியாமல், தாழ்ந்து போகும் நிலையில் இரு க்கும் கப்பலைப் போல அவன் வாழ்க் கையிருந்தது. அப்படிப்பட்ட வே ளையிலே கடலிலே இருக்கும் வெளிச்சவீட்டைப் போல, ஒரு வெளிச்சத்தை அவன் கண்டான். காரிருள் சூழ்ந்திருக்கும் வேளை யிலே விடிவெள்ளி அவன் வாழ்க்கையிலே உதித்ததது. அந்த நாட்டின் ராஜாவானவன், ஆள்அனுப்பி அவனை கண்டு பிடித்தார்;. அவன் தகப்பனானவரும், அவன் குடும்பத்தாரும் செய்த நன்மைகளுக்கு கை மாறு கொடுக்கப்படவில்லை, என்று அறிந்த ராஜாவனான், அவனையும் அவன் குடுத்பத்தையும் படுகுழயிலிருந்து தூக்கி உயர்த்தி வைத்தான். பலரின் பார்வையில் நம்பிக்கையற்ற நிலையில் வாழ்ந்த அவன் வாழ்வு மறுமலர்சியடைந்தது. ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, நம்மு டைய தேவனானவர், தம்முடைய ஜனங்கள் அநே ஆண்டுகளாக, தேவ னுடைய சத்தத்திற்கு செவி கொடுக்காமல், செய்து வந்த தொடர்ச்சி யான மீறுதல்களின் நிமித்தம், சிறைப்பிடிக்கப்பட்டு போனார்கள். இனி அவர்களுக்கு ஒரு தேசம் இல்லை என்கின்ற நிலைக்கு அவர்கள் தள் ளப்பட்ட போதும், அவர் முன்குறித்த நாளிலே அவர்களை மீண்டும் கூட்டிச் சேர்த்தார். உங்களுடைய வாழ்விலும், எப்படிப்பட்ட காரணங்க ளாலும் பின்னடைவுகள் எற்பட்டு இருந்தாலும், அநாதரவாய் துரத்துண்டி ருந்தாலும், மனதுருகின்ற தேவனாகிய கர்த்தரை நோக்கி பாருங்கள். இது எப்படி ஆகும்? எப்படி சாத்தியமாகும்? என்று சந்தேகங்களை விட்டு விட்டு, நம்பிக்கையிலே உறுதியாய் இருங்கள். உங்கள் வாழ் வை முற்றுமாய் அவரிடத்தில் ஒப்புக் கொடுங்கள். நீ பூமியின் கடை யான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும், 'உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவ னாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார். உன்னுடைய வர்கள் வான த்தின் கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும், உன் தேவனாகிய கர்த்தர் அங்கே இருக்கிற உன்னைக் கூட்டி, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து, உன்னை பெருகப் பண்ணுவார்.'
ஜெபம்:
மனதுருகின்ற தேவனாகிய கர்த்தாவே, என்னை சூழ்ந்திருக்கும் இருளை நீக்கும்படி என் வாழ்வில் தீபமாக வந்தவரே, எந்நிலையிலும் நான் உம்மேல் நம்பிக்கையாயிருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - உபாகமம் 31:8