புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 03, 2024)

உலக தோற்றமுதல்...

எபேசியர் 1:4

அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே,


ஒரு சமயம், ஒரு விசுவாசியாவன், 'எனக்கு இந்த விஷயத்தில் நல்ல அறிவும் அனுபவமும் இருக்கின்றது, எனக்கு எல்லாம் புரியும், நான் செய்வது சரி, இது என் வாழ்வு' என்று தன் சொந்த கொள்கையிலே வைராக்கியமாக இருந்து வந்தான். காலங்கள் கடந்து சென்று, அவன் வாழ்விலே சூழ்நிலைகள் மாறிய போது, காரியமறியாத மூடனைப் போல நடந்து கொண்டேன் என்று மனவேதனை அடைந்தான். ஏனெ னில், காலங்கள் அவனுடைய கை யில் இல்லை. நாளை என்ன நடக் கும் என்று அறியாத மனிதனுடைய அறிவும் அனுபவமும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே இருக்கின்றது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது அவனுக்கு அறியாத ஆழமாக இருப்பதினாலே, தற்போது அவ னுக்கிருக்கும் தகவல்களின் அடிப்படையிலே வாழ்வின் முக்கிய தீர் மானங்களை எடுத்து விடுகின்றான். மனிதனானவன் காலத்திற்குள் கட் டுப்பட்டிருக்கின்றான். ஆனால், சர்வ வல்ல தேவனாகிய கர்த்தரோ கால த்தை கடந்தவர். காலங்களை உருவாக்கியவர் காலத்திற்கு கட்டுப்பட்ட வரல்ல. உலகமும், பூமியும் தோன்றும் முன்னதாக என்றென்றும் இரு க்கின்ற தேவனானவர், உலக தோற்றத்திற்கு முன்னதாகவே கிறிஸ்துவு க்குள் நம்மைத் தெரிந்து கொண்டார். இந்த உலகத்திலே, மனிதர்கள் உறவுகளை ஏற்படுத்துகின்றார்கள். ஒரு மனிதனாவன், தனக்கென்று ஒரு மனைவியை, வெளித்தோற்றம், செயற்பாடுகள், தகமைகள் அடிப் படையில் தெரிந்து கொண்டு, அவளை தன் மனைவி என்று உறவு பாராட்டுகின்றான். அதுபோலவே காலத்திற்கு காலம் மனிதர்கள் நண்ப ர்களை தெரிந்து கொண்டு, உறவு பாராட்டுகின்றார்கள். ஆனால், தங் கள் தெரிவுகள் தங்கள் விருப்பப்படி இருக்காதவிடத்து, உறவும், நட்பும் தணிய ஆரம்பிக்கின்றது. ஆனால், நம்மீது அன்புகூர்ந்த தேவனாகிய கர்த்தரோ, நாம் இந்த உலகத்தில் பிறப்பதற்கு முன்னதாக நம்மை தெரிந்து கொண்டார். இது ஏதேட்சையாக நடந்த காரியமல்ல. நம்மு டைய செயற்பாடுகளையும், தகைமைகளையும், வெளித்தோற்றங்க ளையும் வைத்து அவர் நம்மை முன்குறிக்கவில்லை. நாம் இருக்கின்ற வண்ண மாகவே நம்மை அழைத்து, இந்த உலகத்தைவிட்டு, வேறு பிரிந்த வாழ்வு வாழு ம்படி முன்குறித்திருக்கின்றார். எனவே, நாம்; இந்த உலகத்திற்கு ஒத்த ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய சித்தப்படி வேறு பிரிக்கப்பட்ட வர்கள் என்று அறிந்து உணர்ந்தவர்களாய், பரிசுத்த வாழ்விற்கு நம்மை ஒப்புக் கொடுப்போமாக.

ஜெபம்:

உலதோற்றத்திற்கு முன்னதாகவே என்னை தெரிந்த கொண்ட தேவனே, உம்முடைய அநாதி தீர்மானம் என் வாழ்வில் நிறைவேறும்படிக்கு, நான் உணர்வுள்ள வாழ்க்கை வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 1:23