புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 02, 2024)

தாயின் கருவில் தெரிந்து கொண்டவர்

சங்கீதம் 139:16

என் கருவை உம்முடைய கண்கள் கண்டது


இன்று மனிதர்கள் தங்ளுக்குள்ளே இரகசியங்களை பேசிக் கொள்கின்றார்கள். நாடுகள் தங்களுக்குரிய இரகசியங்களை மற்றவர்கள் அறி யாதபடிக்கு பேணிப் பாதுகாக்கின்றார்கள். மனிதர்களுடைய மனதிலே, மற்றவர்கள் அறியாத புதிர்கள் அநே கமுண்டு. இப்படியாக மனிதர்கள் தங்களையும் தங்கள் மனதிலுள்ளவை களையும் ஒளித்துக் கொள்ளும் நேர ங்கள் உண்டு. ஆனால், தேவனுக்கு மறைவான காரியம் ஏது? கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூர த்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கி றீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக் கிறீர்' என்று தேவ பக்தன் சர்வ வல்லமையள்ள தேவனுடைய தன்மை களை குறித்து பாடியிருப்பதை பரிசுத்த வேதாகமத்தில் நாம் வாசிக்கி ன்றோம். நாம் தேவனை நம்முடைய கண்களால் காணாதிருக்கலாம், ஆனால் அவரோ நம்மை எப்போதும் காண்கின்றவராகவே இருக்கின் றார். அவர் நம்மை தாயின் கருவினிலே காப்பாற்றினார். என் அவயவங் களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், அவருடைய புஸ்தகத்தில் எழுதியிருந்தது. ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, நம்முடைய பிதாவாகிய தேவன் நம்மேல் வைத்திருக்கும் அன்பை யாரால் கூற முடியும்? இந்த உலகத்திலுள்ள மனிதர்கள் உங்களை அறிந்து, சில காலங்கள் உங் களை பின்பற்றி, உங்களோடு உறவு கொண்டாடலாம். ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு. அதற்கு ஒரு ஆரம்பமும், ஒரு முடிவும் உண்டு. வஞ்சிக்கும் பிசாசானவன், வஞ்சனையினாலே உங்களை தனது பக்க மாய் இழுத்துக் கொள்ள வகை தேடி, பல வடிவங்களிலே உங்களை பின்பற்றி வருவான். உங்களை உருவாக்கும்படியல்ல, உங்களை நித்தி யமாய் அழித்துப்போடும்படிக்கே வருகின்றான். ஆனால், தேவனாகிய கர்த்தரோ, யாவரும் பாவக்கட்டில் இருந்து விடுதலையாகி, நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, தாயின் கருவிலிருந்து பாதுகாத்து வருகின்றார். எனவே வேதனை உண்டாக்கும் வழிகளை விட்டு அவரையே பற்றிக் கொண்டு, நித்திய வழியிலே நடவுங்கள். தாயின் கருவில் தெரிந்தவர் ஒருபோதும் கைவிட மாட்டார்.

ஜெபம்:

என் இருதத்தை ஆராய்தறிகின்த தேவனே, வேதனை உண்டா க்கும் வழிகளைவிட்டு, நான் உம்முடைய அநாதி தீர்மானம் என்னில் நிறைவேறும்படி உம்முடைய வழியில் நடக்க கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எரேமியா 1:5