தியானம் (ஆடி 31, 2024)
மேன்மையான பட்டப்படிப்பு
பிலிப்பியர் 2:8
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந் தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படி ந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
ஐயா மேய்ப்பர் அவர்களே, வேதத்தை குறித்து நீங்கள் அநேக காரியங்களை கற்று பாண்டித்தயம் பெற்றுகின்றீர்கள். நானும் உங்கள் வழி யிலே நடக்க என் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக (ஆநவெழச)இருந்து வழி காட்ட வேண்டும் என்று ஒரு வாலிபனானவன் மேய்யரானவரொருவரை கேட்டுக் கொண்டான். நன்கு வயதான அந்த மேய்ப்பரானவர், அந்த வாலிபனை நோக்கி: மகனே, நான் கற்று பாண்டித்தியம் பெற்ற பெரிய கலைகளிலே அதிமுக்கியமானதை உனக்கு சொல்லித்தருகின்றேன். நீ அதை உன் இளவயதிலேயே கற் றுக் கொள்வாயானால் உன் வாழ் க்கை வெற்றிதான் என்று கூறினார். அதற்கு அந்த வாலிபனானன் ஆர் வத்தோடு, அதை எனக்கு சொல் லித் தாருங்கள், நான் தாமதமின்றி அதைக் கற்றுக் கொள்ளுவேன் என்று கூறினார். அதற்கு அந்த மேய்ப்பரானவர்: மகனே, மனத்தாழ்மை கற்றுக் கொள்ளு. முதலாவதாக உன் பெற்றோர் முன்னிலையிலே கீழ்ப டிவுள்ளவனாக இரு. ஏற்ற காலத்திலே கர்த்தர் உன்னை உயர்த்து ம்வரை மூப்பர்களுக்கு கீழ்படிந்திரு. இந்த கலையை நீ கற்றுக் கொள் ளாமல், வேறு எதைக் நீ கற்றுக் கொண்டாலும், தேவன் முன்னிலை யிலே நீ பிரியமுள்ளவனாக இருக்க முடியாது. இதுதான் ஆவிக்குரிய வாழ்வின் வெற்றியின் இரகசியம் என்று தயவாய் அவனுக்கு கூறினார். அவர் ஏதாவது ஒரு பட்டப்படிப்பை குறித்து கூறுவார் என்று எதிர்பார்த் திருந்த அவன், சற்று ஏமாற்றமடைந்தான். ஆம் பிரியமானவர்களே, இந்த இந்த உலகிலே அநேக காரியங்களை கற்றாலும், தேவ சித்தம் நிறைவேறும்படி நம்மை நாம் தாழ்த்தி ஒப்புக் கொடுக்காவிட்டால், நாம் கற்றுக் கொண்டவைகளால்; பலன் அற்பமானதாகவே இருக்கும். இன்று பலர், பல வேதபாடங்களை கற்று, சில இடங்களிலே இளவயதி லேயே போதகர், மேய்ப்பர், சுவிசேஷகர் என்று பற்பல நாமங்களை தங்கள் பெயர்களின் முன் பதவிகளாக பெற்றுக் கொள்கின்றார்கள். அவர்கள் எதைப் பெற்றுக் கொண்டாலும், மனத்தாழ்மையும், கீழ்படிவையும் கற் றுக் கொள்ளும்வரை, அவர்கள் தேவ சித்தத்தை தங்கள் வாழ்விலே நிறைவேற்றி முடிக்க முடியாது. கிறிஸ்துவைப் போல மாறுபடிக்கு முத லாவதாக, கிறிஸ்துவில் இருந்த சிந்தையை கற்றுக் கொள்ளுங்கள். வேதம் சார்ந்த பட்டப்படிப்புக்கள், இந்த மேன்மையை உங்க ளுக்கு கற்றுக் கொடுக்காவிட்டால், அந்த கல்வியினால் என்ன பிரயோஜனம்?
ஜெபம்:
உம்முடைய திருக்குமாரனுடைய சாயலிலே வளரும்படி என்னை அழைத்த தேவனே, நான் கற்றுக் கொள்பவைகளால் மனத்தாழ் மையிலே வளர்ந்து பெருகும்படி எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 பேதுரு 5:7