புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 30, 2024)

மனத்தாழ்மையை கற்றுக் கொள்ளுங்கள்

மத்தேயு 23:12

தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்


அநேகமாயிரம் பொன் வெள்ளிகளைப் பார்க்கிலும் தேவனாகிய கர்த்தர் விளம்பின வேதமே எனக்கு நலம் என்று சங்கீதப் புத்தகத்திலே காண் கின்றோம். ஏனெனில், திராளான செல்வத்தினால் கண்டடைய முடி யாத, ஒப்பற்ற நித்திய வாழ்வை தேவ வார்த்தைகள் வழியாக மட்டுமே மனிதர்கள் பெற்றுக் கொள்ள முடியும். வாழ்வு தரும் வழியை வேதம் நமக்கு பட்டப் பகலைப் போல காண் பிக்கின்றது. ஆனாலும், பரிசுத்த வேதா கமத்தை முறைப்படி, நன்றாக கற்று பட்டம் பெற்றவர்களில் சிலர் நித்திய வாழ்வின் வழியைவிட்டு மனிதர்களை தவறான வழிக்கு நடத்திச் சென்று விடுகின்றார்கள். அது எப்படி சாத்தி யமாகும்? ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே, வேதபாரகர் என்று ஒரு சாரார் இருந்தார்கள். இவர்கள் அன்றைய நாட்களிலே, வேத பிரமாணங்களை முறைப்படி கற்று, பாண்டித்தியம் பெற்று, மதத்தலைவர்களால் அங்கீ காரம் பெற்றிருந்தார்கள். இவர்களை சட்ட வல்லுஞர்கள் என்றும் அழை ப்பார்கள். ஆனாலும், வேத பிரமாணங்கள் யாவும் வாக்களிக்கப்பட்ட மீட் பராகிய இயேசு கிறிஸ்துவை பற்றிதாயிருந்த போதும், இவர்கள் முன் னிலையிலே பிரதியட்சமாக அவர் வந்த போதும், அவரை அறியாதபடி மனக்கண்கள் குருடுபட்டவர்களாக இருந்து, ஆண்டவர் இயேசுவை கொன்றுபோடும்படி திட்டம் போட்டு வந்தார்கள். இவர்களை குறித்து ஆண்டவர் இயேசு கூறும்போது: 'மாயக்காரராகிய வேதபாரகரே! பரி சேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ் யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை' என்று கண்டித்துக் கூறினார். வேதத்தை நன்றாக கற்றவர்களின் நிலைமை எப்படியாய் இந்த நிலைக்கு வந்தது. தங்கள் அழிவுக்காக வேத பிரமா ணங்களை கற்றுக் கொண்டார்களா? அவர்கள் தாங்கள் கற்றுக் கொண் டதை கைக்கொள்வதில்லை. அதை சுட்டிக் காட்டினாலும், கீழ்படிவத ற்கு மனத்தாழ்மை அவர்களிடத்தில் இருந்ததில்லை. பிரியமானவர் களே, வேதத்தை கற்று பாண்டித்தியம் பெறுவது உங்களுக்கு நன்மை யாக இருக்கும்படி, நீங்கள் எவ்வளவாய் கற்றுக் கொள்கின்றீர்களோ அவ்வளவாய் உங்களைத் தேவன் முன்னிலையிலே மனதார தாழ்த்தி, பரிசுத்த ஆவியாவரின் வழிடத்துதலுக்கு இடங் கொடுங்கள். உலகத் தினால் உண்டான பட்டங்களை பெறுவதற்கு முன், வேதம் கூறும் மனத் தாழ்மையை கற்றுக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

சகல சத்தியத்திலும் என்னை வழிநடத்து சத்திய ஆவியானவரை இந்த உலகத்திற்கு அனுப்பின தேவனே, நான் எதை செய்தாலும், ஆவியானவரின் வழிநடத்துதலின்படி செய்ய எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:29