புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 29, 2024)

கற்றவைகளை கைக்கொள்ளுங்கள்

யாக்கோபு 1:22

அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய் கிறவர்களாயும் இருங்கள்.


கணக்கியில் கல்வித்துறையிலே மேற்படிப்பை தொடர்ந்து கொண்ட மனிதனனொருவன், அதின் பாடங்களில் அதிவிசேஷட சித்தியை பெற்று அந்தத் துறையிலே அதியுயர் பட்டத்தை பெற்றுக் கொண்டான். அவன் வாழ்ந்து வந்த ஊரிலேயே, அந்தத் துறையிலே அவனுடைய பேச்சுக்கும், அறிவிற்கும் நிகரானவர்கள் கண்டு கொள்வது அரிதான காரியமாக இருந்தது. அவன் தான் கற்றுக் கொண்டவைகளை மற்றவர்க ளுக்கு சொல்லிக் கொடுப்பதிலும் மிகவும் தேர்ச்சி பெற்றவனாக இருந்து வந்தான். ஆனாலும், அவனுடைய சொந்த வாழ்க்கையிலே கணக்கு வழ க்குகள் முறையற்றதாக காணப்பட்டது. அதாவது, அவன் கற்றுத் தேர்ந்தது உண்மை ஆனால் அவன் கற்றவை களை தன் சொந்த வாழ்வில் கைகொ ள்வதில்லை. கருபொருளாவது, ஒரு வன் ஒரு துறையிலே தேர்ச்சி பெற்றி ருப்பதால், அவன் தன் வாழ்விலே அதைக் கைகொள்கின்றான் என்பது பொருளல்ல. இன்றைய நாட்களிலே தொழிநுட்பமானது பல காரிய ங்களை குறித்த அறிவை, மனிதர்களுடைய உள்ளங் கைகளுக்கு கொண்டு வந்ததுள்ளது. தேவனைப் பற்றிய அறிவிலே வளர வேண் டும், வேதத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி, பலர் இறை யியலைக் கற்று கலாநிதிப் பட்டங்களையும் பெற்றுக் கொள்கின்ற hர்கள். அவர்கள் கிரேக்க பாiஷ, எபிரெய பாiஷ, ஆங்கில பாiஷ என்று கூறி, வேதத்தின் பல அம்சங்களை அழகாக தொகுத்து வழங் குகின்றார்கள். இந்த அறிவு அவர்களுக்கு இருப்பதினால் மாத்திரம், அவர்கள் தேவனுடைய வார்த்தையை தங்கள் சொந்த வாழ்விலே கைக் கொள்கின்றார்கள் என்று கூறிவிட முடியாது. ஒரு மரத்தை அதன் கனிளால் அறிவது போல, தங்களை தேவனுடையவர்கள் என்று கூறிக் கொள்பவர்களையும் அவர்கள் வாழ்க்கையின் கனிகளால் அறியப் படுவார்கள். இந்த விடயத்திலே விதிவிலக்கேதுமில்லை. மன்னிப்பின் மாட்சியையும, அதின் ஆழத்தையும் நன்றாக அறிந்தவன், தனக்கு விரோதமாக வேறொருவன் செய்த தப்பிதத்தை மன்னிக்க முடியாதிரு ந்தால், அவன் பெற்ற இறையியல் அறிவினாலே அவன் ஆத்து மாவிற்கு பலன் என்ன என்பதை சிந்தித்துப் பாருங்கள். எனவே திருவசனத்தை கற்று, அதைக் கைக்கொள்கின்றவர்களாக வாழுங்கள்.

ஜெபம்:

நித்திய வாழ்விற்கென்று என்னை அழைத்த தேவனே, நான் திருவசனத்தை கேட்டு, நன்றாக பேசுகின்றவனாக மாத்திரம் இருக்காமல், அவற்றை கைகொள்ளத்தக்தான உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:1