புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 28, 2024)

ஜெயம் கொள்ளும் வாழ்க்கை

நீதிமொழிகள் 2:6

கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.


இந்த உலகிலே வாழும் நாட்களிலே மனிதர்கள், தங்கள் வாழ் நாட்களிலே, கற்றுக் கொள்ள வேண்டும் என்று பல முயற்சிகளை எடு க்கின்றார்கள். கற்றுக் கொள்வது என்று கூறும் போது, பாடசாலை களுக்கோ, கல்வி நிலையங்களுக்கோ சென்று முறைப்படி பாடங்களை கற்றுக் கொள்வது என்பது பொருளல்ல. பல காரணங்களுக்காக, கற் றுக் கொள்ள வேண்டும் என்று முய ற்சிகளை எடுக்காதவர்களும் அவர்க ள் வாழ்க்கையில் சந்திக்கும் சூழ்நி லைகளால் பல காரியங்களை கற்றுக் கொள்கின்றார்கள். அவற்றுள் சில கடினமான அனுபவங்களாக இருக்கும். அதே வேளையிலே முறைப்படி மேற்படிப்புக்களை முடித்தவர்களை இந்த உலகமானது அவரவர் கல்வித் தகமைகளுக்கேற்ற கனத்தை கொடு கின்றது. அதனால், இந்த உலகிலே வாழும் கல்விமான்கள் யாவரும் ஞானிகள் என்பதும் பொருளல்ல. இந்த உலகத்தின் கல்வியறிவு யாவும் இந்த உலகத்துக் குரியதும், உலகத்திலுள்ளவைகளை குறித்தவைகளாவும் இருக்கின்றது. வானமும், பூமியும், அதிலுள்ள யாவையும் அழிந்து போகும் போது, அவைகளோடே கூட உலக அறிவும் கடந்து போகும். உலகத்திலுள்ள அறிவினாலே, எவரும் உலகத்தை ஜெயித்துவிட முடியாது. உலக கல்வியானது உலகத்தின் கட்டிற்பாட்டிற்குள் இருக்கும் போது, கட்டுபாட்டிலிருப்பது எப்படி கட்டுப்படுத்துவதை மேற்கொள்ள முடியும். அழியாமையை குறித்து அறிவானது, பரத்திலிருந்த உண்டாகின்றது. பரலோகத்திற்குரியவைகள் இந்த உலகத்தின் ஆளுகைக்கு உட்பட்டது அல்ல. அவை உலகத்திற்குரியவைகளுக்கு மேற்பட்டதாக இருக்கின்றது. அந்த அறிவானது பரலோகத்திலிருந்து வரும் மெய் ஞானத்தினால் உண்டானவைகளாக இருக்கின்றது. அந்த ஞானமானது, கல்வியினாலோ, அனுபவத்தினாலோ யாரும் பெற்றுக் கொள்ள முடியாது. அந்த மெய்ஞானமானது விசுவாசத்தினாலே உண்டாகின்றது. தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? எனவே, விசுவாசத்திலே நிலைத்திருங்கள். விசுவாசத்திலே நிலைத்திருப்பவன் தேவ வார்த்தையில் உறுயாய் நிலைத்திருக்க வேண்டும். நாம் எவ்வளவாய் கற்று தேர்ந்தவர்களாக இருந்தாலும், ஆண்டவராகிய இயேசுவினாலன்றி நாம் இந்த உலகத்தை ஜெயம் கொள்ள முடியாது.

ஜெபம்:

அன்பின் பரலோக பிதாவே, உம்முடைய நாமமே மெய்ஞானம் என்ற உண்மையை அறிந்தவனாய் எப்போதும் உமக்கு பயந்து உம்முடைய வார்த்தையின் வழியில் வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 1:27