புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 26, 2024)

வார்த்தையில் நிலைத்திருங்கள்

சங்கீதம் 119:114

என் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.


ஒரு ராஜ்யத்தை அரசாண்டு வந்த பராக்கிரமமுள்ள சக்கரவத்தியானவன், யுத்தத்திற்கு செல்லும் தன்னுடைய போர்சேவர்களை கூட்டிச் சேர்த்து, அவர்கள் யுத்தத்தில் வெற்ற பெற வேண்டிய சகல விதமான ஆயுதங்களும், யுக்திகiளும், வழிநடத்துதலும், கட்டளைகளும் உங்களுக்கு தகுந்த நேரத்திலே கொடுக்கப்படும். அவைகளை நீங்கள் கைக் கொள்ளும் போது, நீங்கள் ஒருபோதும் தோற்றுப் போவதில்லை என்று உறு திமொழி கூறினான். அவர்களில் ஒரு வன் கொடுக்கப்பட்ட ஆயுதத்தை தரிக்காமல் போர்களத்தில் நின்றால், அவனை காணும் எதிரியானவன் என்ன செய் வான்? அவனிடம் ஆயுதம் இல்லை எனவே அவனை விட்டுவிடுவோம் என்று கூறுவானோ? யுத்தத்தில் தன்னுடைய எதிரி யார் என்றும் எதிரியின் பெலன் இன்னதென்றும் அறியாமல் போர்களத்தில் நிற்கும் போர்வீர னின் நிலைமை எப்படியாக இருக்கும்? ஒருவேளை அவன் தன் எதிரியையும் தன் சக போர்வீரன் என்று கருதி பராமுகமாக விட்டு விட க்கூடும் அல்லவோ? யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது, கட்டளை கொடுக்கும் தலைவனோடுள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு போனால் போர்களத்தில் எப்படி யுத்தம் செய்ய முடியும்? அவ்விடத்திலிருந்து தப்பித்துக் கொள்ளவது எப்படி சாத்தியமாகும்? ஒருவேளை இந்த உலகிலே மனிதர்கள் மத்தியிலே நடைபெறும் யுத்தங்களிலே எதிரிக ளும் பெலவீனமடைந்து சோர்ந்து போகலாம் ஆனால் ஆவிக்குரிய யுத்தத்திலே, நாம் அசதியாக இருக்கும் நேரத்தையே காத்திருக்கும் எதிரியாகிய பிசாசானவனும் அவனுடைய தூதர்களும் அந்த நேரத் திலே நம்மை அழித்துப்போடும்படி கிரியைகளை நடப்பிப்பான். நம் முடைய தேவன் சோர்ந்து போவதில்லை, இளைப்படைவ துமில்லை. அவர் சோர்ந்து போகின்றவனுக்கு பெலன் கொடுக்கின்றார். சத்துவமில்லாத வேளைகளிலே சத்துவத்தை பெருகப் பண்ணுகின்றார். எப்படியாக அவர் பெருகப் பண்ணுகின்றார்? அவர் நமக்கு கொடுக்கும் சர்வாயுதவர்க்கம் அவருடைய ஜீவ வார்த்தைகளிலே அடங்கி இருக்கி ன்றது. அவருடைய விளம்பிய வேதம் குறைவற்றது. அவர் தம்முடைய வார்த்தையை அனுப்பி குணமாக்குகின்றார். அவருடைய வசனம் நம் செல்லும் வழிக்கு வெளிச்சமாக இருக்கின்றது. எனவே அதை வாசி ப்பது மாத்திரமல்ல, அதன்படி நாம் நடக்கும் போது, நாம் சோர்ந்து போகும் நேரத்திலும் புது பெலன் அடைகின்றவர்களாக இருப்போம்.

ஜெபம்:

என் அடைக்கமும் அரணுமான என் தேவனே, நாம் எப்போதும் அந்த அரணுக்குள்ளே இருக்கும்படிக்கு உம்முடைய வார்த்தையை தியானித்து அதன் வழியிலே நடக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 40:28-31