புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 23, 2024)

கடினமனங்கள் உடைக்கப்படும்

1 தீமோத்தேயு 2:1

எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;


சத்தியத்தை அறிந்த மனிதனொருவன், அநேக ஆண்டுகளாக, பல தேவ ஆலோசனைகளை கேட்டிருந்தான். அந்த ஊரிலுள்ள விசுவாசி களில் சிலர், அவன் தன் பெலவீனங்களிலிருந்து விடுதலையாவற்குரிய வழிகளை உண்டாக்கிக் கொடுத்திருந்தார்கள். அதுமட்டுமல்லாமல், அவ னுக்கு உதவி செய்வதற்கு அநேகர் முன்வந்து பல சந்தர்ப்பங்களை கொடுத்திருந்தார்கள். அப்படியிருந் தும் அவன் மனதிரும்ப மனதில் லாதவனாய் தன் இருதயத்தை கடி னப்படுத்திருந்தான். அவனைக் குறி த்து அவனை அறிந்து விசுவாசிகள் என்ன செய்ய முடியும்? அவனை காணும் போதெல்லாம் சபிப்பதா? அல்லது அவனை நினைக்கும் போத தெல்லாம் அவன் கல்மனம் உடை யும்படிக்கு அவனக்காக தேவனை வேண்டிக் கொள்வதா? இதில் எந் தத் தெரிவு அவனை அறிந்த ஒரு விசுவாசியானவனுக்கு தகுதியானது? சற்று சிந்தித்துப் பாருங்கள். அவனுடைய ஆத்துமா பாதாளத்தில் அழி ந்து போகாமல் அவனுக்காக அவனை அறிந்த அந்த விசுவாசியானவன் ஜெபிப்பதே ஒரு தேவபிள்ளைக்கு தகுதியானது. அதனால், அவ னோடு அந்த விசுவாசியானவன் உடன் சகோதரனைப் போல ஐக்கியமாக இரு க்க வேண்டும் என்பது பொருளல்ல. ஒரு விசுவாசியானவன் உலகம் முழுவதையும் ஆதயப்படுத்திக் கொள்வதைப் பார்க்கிலும், அவன் தன் ஆத்துமாவானது இந்து உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுவது முக்கியமானது என்று வேதம் கூறுகின்றது. தேவ ஆலோசனையை அசட்டை செய்து புறக்கணிக்கின்றவனைக் குறித்து பரி சுத்த வேதாகமம் என்ன கூறுகின்றது. 'வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரை யைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.' என்று அறிவுரை கூறுகின்றது. அன்பின் அரவணைப் போடு கூறும் புத் திமதியை தள்ளிவிடுகின்ற தன்னுடைய பிள்ளையை ஒரு நல்ல தகப் பனானவர், அவன் பாட்டிற்கு விட்டுவிடுவனோ? இல்லை, அவன் உணர் வடையும் படி, கண்டித்து, தண்டித்து, சிட்சிப்பார் அல்லவோ? அதுபோ லவே, நம்முடைய பரம பிதாவும்;, உணர்வற்ற இருதயங்களை உணர்வ டையும்படி செய்கின்றார். ஒருவேளை அனுபவங்கள் கசப்பாக இருந்தா லும், அவற்றுக்கூடாக நன்மையான விளைச்சலை கண்டடையும்படி கிருபை செய்வார். எனவே நம்பிக்கையில் உறுதியாயிருந்து, கல்ம னங்கள் உடையும்படிக்கு ஜெபம் செய்யுங்கள்.

ஜெபம்:

உணர்வள்ள இருதயத்தை எனக்கும் தந்த தேவனே, என்னுடைய இருதயத்தில் ஒருபோதும் உணர்வற்றுக் போகாதபடிக்கு, எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 6:18-20