தியானம் (ஆடி 22, 2024)
கடைநேர மனந்திரும்புதல்
2 கொரி 6:2
இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.
ஒரு மனிதனானவன், தன் வாழ்வின் பெரும்பகுதியிலே, ஆண்டாண்டு காலமாக ஆத்துமாவை விடுதலையாக்கும் சத்தியம் கேட்டிருந்தான். நித்திய வாழ்வுக்கு செல்லும் வழி எது என்பதை திட்டமாக அறிந்திரு ந்தும், தன் உலக வாழ்க்கை தரும் இன்பங்களை விட மனதில்லாத வனாய் இருந்தான். அவனுடைய பொறுப்பற்ற வாழ்க்கையைக் குறித்து கேள்விகளை கேட்கும் சில விசுவாசி களுக்கு அவன் மறுமொழியாக: 'நான் ஆண்டவர் இயேசுவோடு சிலுவை யின் தொங்கிய நல்ல கள்வனைப் போல, என் இறுதி நாட்களில், ஆண் டவர் இயேசுவை என் சொந்த இரட்ச ராக ஏற்றுக் கொள்வேன்' என்று கூறி அவ்விடத்தைவிட்டு சென்று விடுவான். ஒருநாள் ஒரு அனுபவமிக்க மேய்பரானவர் அவனோடு பேசிக் கொண்டிருக்கும் போது, அவன் வழமை போல தான் நல்ல கள்வனைப் போல கடைசி நேரத்தில் மனம் திரும்பி விடுவேன் என்று கூறினான். அதற்கு அந்த மேய்பரானவர் சாந்தமுள்ள தொனியோடு அவனை நோக்கி: மகனே, நீ அவ்வண்ண மாக மனந்திரும்ப உனக்கு சந்தர்ப்பம் உண்டானால் நல்லது. ஆனால், ஆண்டவர் இயேசுவோடு, சிலுவையில் மற்றப் பக்கம் தொங்கிய மன திம்பாத கள்வனைப் போல சடுதியிலே நீ மரித்துப் போனால் உன் நிலை என்னாகும் என்று எப்போதவது சிந்தித்துண்டா? என்று கேட்டார். மனக்கலக்கத்தோடு அவ்விடம் விட்டுச் சென்ற அந்த மனிதனாவன், அன்றைய நாளிலே தன் வாழ்க்கையின் வழியை குறித்து சிந்திக்க ஆரம்பித்தான். பிரியமானவர்களே, சத்திய வழியிலே செல்வதற்கு தடையோ, எதிரான சட்டமோ இல்லாத நல்ல நாட்கள் வாழ்விலே உண் டாயிருக்கும் போது, ஆண்டவர் இயேசுவை பற்றிக் கொள்ளாதவன், உபத்திரவத்தின் நாட்கள் வரும் போது என்ன செய்வான்? யோபு என் னும் தேவ பக்தியுள்ள மனிதனுடைய மனைவி தேவனை அறிந்தவள் போல வாழ்ந்து வந்தாள். ஆனால், உபத்திரவத்தின் நாட்;கள் வாழ்க் கையை சூழ்ந்து கொண்ட போது, தேவனை தூஷpக்;கும்படி தன் கணவ னாகிய யோபுக்கு மதியற்றவளைப் போல துர்ஆலோசனை கூறினாள். எனவே, எந்தவித பெலவீனமோ, ஆசை இச்சைகளோ உங்கள் இருதயங்களை ஆண்டுகொள்ள விடாதபடிக்கு, தேவ சத்தத்தைக் கேட்கும் போது, மனதை கடினப் படிடுத்திக் கொள்ளாமல்? இன்றே இப்பொழுதே உங்கள் வாழ்க்கையை முற்றும் முழுவதுமாய் ஆண்டவர் இயேசுவிடத்தில் ஒப்புக் கொடுங்கள்.
ஜெபம்:
பரிசுத்ததத்திற்கென்று என்னை அழைத்த தேவனே, பிற்பாடு பார்த்துக் கொள்வோம் என்று கூறி, மனந்திரும்புதலின் நாளை நான் பிற்போடாதபடிக்கு, உடடினடியாக மனந்திரும்பும் உணர்வுள்ள உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபிரெயர் 3:15