புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 21, 2024)

பிள்ளைகளின் வழி

நீதிமொழிகள் 22:6

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.


'நான் செய்யாத குற்றங்களையா அவன் செய்கின்றான்? நான் அனுபவிக்காத சுகபோகங்களையா அவன் நாடித் தேடுகின்றான். இது அவனுடைய வாலிப வயது, வாலிபத்தின் நாட்களை அவன் சற்று அனுபவிக்கட்டும். விருப்பினதை உடுத்தி, ஆசைப்படுவதை குடிக்கட் டும், என்னை இரட்சித்த கர்த்தர் அவனை இரட்சிப்பார்' என்று ஒரு தகப்பனானவர் தன் மகனாவனனு டைய போக்கை குறித்து தன் மேய் பரானவரிடம் கூறிக் கொண்டார். இன்று இப்படிப்பட்ட எண்ணக் கரு த்துக்களோடு வாழ்பவர்கள் தங் களை விசுவாசமார்க்கத்தார் என்று கூறிக் கொண்டாலும், அவர்கள் பின்மாற்றமான வாழ்க்கையையே வாழ்ந்த வருகின்றார்கள். பிள்ளை கள் தங்கள் பெற்றோர் கூறும் நல் ஆலோசனைகளை மீறி தவறு செய்வது ஒரு காரியம். ஆனால், பிள்ளைகள் பாவம் செய்யட்டும் என்ற மனதுடன் பரா முகமாகாய் இருப்பது வேறு ஒரு காரியம். ஒரு நல்ல தகப்பனானவன், தான் விட்ட தவறுகளின் பின்விளைவுகளை அறிந்திருக்கின்றபடியால், தான் நேசிக் கும் தன் பிள்ளைகள் அவ்வேதனையான வழியிலே செல்லமால் இரு ப்பதற்கு தன்னால் முடிந்த காரியங்கள் யாவையும் செய்ய ஆயத்த முள்ளவனாக இருப்பான். அதிலே தகப்பனானவனுடைய சிட்சையும் உள்ளடங்கும். ஏலி என்னும் ஆசாரியனானவன், தன் பிள்ளைகள் துன் மார்க்கமான வழியியே வாழ்கின்றதை அறிந்த போதும், அவன் தன் குமார்களை நோக்கி: நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது என்ன? இந்த ஜனங்கள் எல்லாரும் உங்கள் பொல்லாத நடக்கைகளைச் சொல்லக்கேட்கிறேன். என் குமாரரே, வேண்டாம்; நான் கேள்விப்படுகிற இந்தச் செய்தி நல்லதல்ல. கர்த்தருடைய ஜனங்கள் மீறி நடக்கிறதற்குக் காரணமாயிருக்கிறீர்களே. ஆனாலும் அவன் தன் இருதயத்திலே தேவ னைப் பார்கிலும் தன் குமாரரை மதித்து வந்ததால், அவன் தேவனை அசட்டை செய்தான். அவ்வண்ணமாக சில பெற்றோரும், மற்ற மனிதர் கள் முன்னிலையிலே, பிள்ளைகள் தவறு செய்யும் போது கண்டிக்கி ன்றார்கள். ஆனால், அவர் அதை தேவன் முன்னிலையிலே உண்மை யாக கூறுவதில்லை. பிள்ளைகளை நெறிப்படுத்துவதற்குரிய காரியங் களை செய்வதில்லை. நாமோ அப்படி செய்யாமல், இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவன் முன்னிலையிலே உண்மையாய் நடக்கக் கடவோம்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழ என்னை அழைத்த தேவனே, உமக்கு முன்பாக நான் என் உள்ளத்திலே உண்மையாக இருக்கும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருயதத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:9