தியானம் (ஆடி 18, 2024)
புதுவாழ்விற்கான அழைப்பு
1 யோவான் 2:16
ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ள வைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
தேவனாகிய கர்த்தாமே ஒருவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதையே விரும்புகின்றார். நான் துன்மார்க்க னுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைத்திருக்கி ன்றார் (எசேக்கியேல் 33:11). எனவே ஒருவன் நீங்கள் எப்படியும், உடுத்தலாம், எப்படியும் வாழலாம், எதை யும் குடிக்கலாம், மனம் விரும்பிய தைப் பார்க்கலாம், உங்கள் ஆசை ப்படி எங்கும் போகலாம் என்ற தவ றாக உபதேசத்தோடு அழைப்பு விடு க்கின்றார்கள். அப்படியல்ல, மாறாக நீங்கள் எப்படியும் உடுத்தியிருக்க லாம். கண்போன போக்கில் வாழ்ந் திருக்கலாம், விரும்பியதெல்லாம் குடித்து, கண்களுக்கு இன்பமான தை பார்த்திருக்கலாம், மனஆசை ப்படி உல்லாசமாக எங்கும் சென்று வந்திருக்கலாம் அவை உங்கள் வாழ்வின் முடிவாக இருக்க வேண்டி யதில்லை. உங்கள் சொந்த பாதைகளையும், செம்மையாக தோன்றும் வழிகளையும் விட்டுத் திரும்பும்படிக்கு தேவனாகிய கர்த்தர்தாமே யாவரையும் அழைக்கின்றார். தங்கள் கண்போன வழியிலே வாழ்ந்து தங்கள் அருமையான நாட்களை வீணாக்கிய பலர், தேவ கிருபையிலே விசுவாசத்தை கொண்டு இரட்சிப்பை அடைந்து, பரிசுத்தமாகுதலை தேவ பயத்தோடு காத்துக் கொள்கின்றார்கள். ஆனால், தேவனை ஆண் டாண்டு காலம் அறிந்தவர்களில் சிலர், தங்கள் மனதின் ஆசைகளின்படி வாழ வேண்டும் என்பதற்காக, தேவன் வெளிதோற்றத்தையல்ல, இருத யத்தைப் பார்கின்றார் என்று விதண்டாவாதம் செய்து, தங்கள் தங்கள் மனதிற்கு சரியாக தோன்றும் நாகரீகமான நடை, உடை, பாவனை களை தெரிந்து கொள்கின்றார்கள். அது தேவனுடைய நியமனம் அல் லவே, மாறாக அது அவர்களுடைய சொந்த தீர்மானம். இப்படியாக அநேகர் தங்கள் சொந்த விரும்பங்களின்படி தங்களுக்கென்று வழி களை தெரிந்து கொண்டாலும், நீங்கள் குழப்பமடையாமல், கற்றுக் கொண்டவைகளிலே உறுதியாய் நிலைத்திருந்து, தேவனுடைய சித்த த்தை உங்கள் வாழ் வில் நிறைவேற்றுங்கள்.
ஜெபம்:
புதுவாழ்வு வாழ்வதற்காக என்னை அழைத்த தேவனே, இனி நான் என் மாம்சத்தின் விருப்பங்களை நிறைவேற்றாமல், தேவ சித்த த்தை நிறைவேற்றும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எசே 33:11