தியானம் (ஆடி 17, 2024)
நிஜமானவைகளும் போலியானவைகளும்
மத்தேயு 24:11
அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு குறிப்பிட்ட தேசத்திலே சில மனித ர்கள் ஒன்றிணைந்து, போலியான நாணயங்களை அச்சிட்டுள்ளார்கள் என்ற செய்தியை அறிந்து கொண்ட, தேசத்தின அதிகாரிகள், போலி யானவைகளை எப்படி கண்டு பிடிப்பதென்றும், நிஜமானதிற்கும் போலி யானதிற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன என்பதைக் குறித்து, ஜன ங்களுக்கு விரிவான விளங்கங்களை கொடுத்திருந்தார்கள். அரச அதிகாரி யகள் நிஜமானதைக் குறித்து வெளி ப்படைய பேசுவதற்கு தயக்கமடைய வில்லை. ஆனால், போலியான நாண யங்களை அச்சிட்டவர்கள் வெளிப்ப டையாக வந்து, இதை நாங்கள் அச் சிட்டோம், விருப்பமென்றால் நீங்கள் இதை உபயோகிக்கலாம் என்று கூறுவதில்லை. மாறாக, ஜனங்களை வஞ்சிக்கும்படிக்கு, அவர்கள் போலியாவைகளை நிஜமான நாணயங்களோடு கலந்து விடும்படிக் கான நடவடிக்கைகளை செய்து விடுவார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதாமே தம்மிடத்தில் வரும்படி யாவரையும்; அழைக்கின்றார். அவர் மட்டுமல்ல, பிசாசாவனும் தன்னிடத்தில் வரும்படி யாவரையம் அழைக்கின்றான். ஆண்டவராகிய இயேசு அழைக்கும் போது, நான் உங் களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று அழைக்கின்றார். ஆனால், பிசாசானவனோ, நான் கொல்லவும் அழிக்கவும் ஜனங்களை அழைக்கி ன்றான், ஆனால் அவன் நான் கொல்லவும் அழிக்கவும் உங்களை அழை க்கின்றேன் என்று கூறுவதில்லை. அவன் நன்மை செய்கின்றவனைப் போல போலியான வேடம்பூண்டு ஜனங்களை அழிவுக்காக அழைக்கி ன்றான். எனவே, திறந்த வசால்களையும், விசாலமான கதவுகளையும் கண்டு உடனடியாக உள்ளே நுழையாதிருங்கள். இன்று சிலர், நீங்கள் எப்படியும், உடுத்தலாம், எப்படியும் இருக்கலாம், எதையும் குடிக்கலாம், நீங்கள் விரும்பியதைப் பார்கக்லாம், உங்கள் ஆசைப்படி எங்கும் போகலாம் என்ற உபதேசத்தோடு அழைப்பு விடுக்கின்றார்கள். ஆண்ட வர் இயேசு எல்லாரையும் நேசிக்கின்றார் என்ற கூற்றை அவர்கள் கூறிக் கொள்கின்றார்கள். ஆண்டவர் இயேசு எல்லாரையும் நேசிக்கி ன்றார் என்பது உண்மை, ஆனால், நீங்கள் என்னிடத்தில் வந்த பின்பு நீங்கள் விரும்பிய பிரகாரமாக வாழ்ந்து விடலாம் என்று ஆண்டவர் இயேசு ஒருபோதும் கூறியதில்லை. மாறாக, 'நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வ தெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.' என்று கூறியிருக்கின்றார்.
ஜெபம்:
நீதியின் தேவனே, இந்த உலகத்திலுள்ள போலியான வழிகளை நான் பின்பற்றி வஞ்சிக்கப்பட்டு போய்விடாதபடிக்கு, எப்போதும் உம்மு டைய வார்த்தையில் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 7:15