புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 14, 2024)

மேலே உயர்த்தி கீழே தள்ளும்

நீதிமொழிகள் 1:19

பொருளாசையுள்ள எல்லாரு டைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.


ஒரு பூங்காவின் அருகிலுள்ள சிறிய மேட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், தள்ளு வண்டிலிலே ஒருவனை ஏற்றி, மற்ற வர்கள் மேட்டின் உச்சிவரைக்கும் அவனைத் தள்ளி, பின்னர், மேலிரு ந்து கீழே வேகமாக வர விட்டுக்கொண்டிருந்தார்கள். அவ்வழியாக சென்று கொண்டிருந்த வயது முதிர்ந்த ஐயா ஒருவர், அவர்களை நோக்கி: தம்பிமாரே, நீங்கள் உங்களை காயப்படுத்திக் கொள்ளாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். நீங்கள் தவறுதலாக மேட்டின் மறுபக்கம் சென்றுவிட்டால், வண்டில் உங் கள் கட்டுப்பாட்டிற்குள் இருக் காது. அந்தப் பக்கம், அதிக பள்ளமாக இருகின்றது. அங்கே பாறைக் கற்றகளும், முற்பற்;றை களும் அதிகமாகயிருக்கின்றது என்று அறிவுரை கூறினார். வய தானவரின் தோற்றமும், அவரின் பெலவீனமுள்ள குரலும், அங்குள்ள சிறுவர்களுக்கு நகைப்புக்குரியதாக இருந்ததேயல்லாமல், அவரின் அறி வுரையையோ அவர்கள் அற்பமாக எண்ணினார்கள். சற்று நேரம் கழிந்த தும், அவர் கூறிய பிரகாரமாகவே, அவர்கள் தள்ளிய வண்டிலானது, அதிலிருந்த சிறுனொருவனோடு, மேட்டின் மற்றப்பக்கமாக சென்றது. வண்டிலில் இருந்தவனுக்கோ அல்லது அதை தள்ளினவர்களுக்கோ அதை கட்டுப்படுத்த முடியாதபடிக்கு, அதி வேகமாக உருண்டோடி கீழேயுள்ள பறையொன்றிலே மோதிக் கொண்டது. பிரியமான சகோதர சகோதரிகளே, பண ஆசையானது எல்லாத் தீமைக்கும் வேர் என்ற அறிவுரை எத்தனை முறை கேட்டிருக்கின்றீர்கள்? இந்த உலகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைக்காதிருங்கள் என்ற ஆலோசனையை எத்தனை முறை வாசித்திருக்கின்றீர்கள்? பொருளா சையானது ஒருவனை மேட்டில் எறும்படி உந்துதல் செய்யும். அவன் மேட்டில் ஏறும் போது, நான் மேல் நோக்கி உயர்ந்து கொண்டி ருக்கின்றேன் என்று பெருமிதமடைவான். அவன் மேட்டின் உச்சியில் சென்ற பின்பு, கட்டுப்படுத்த முடியால், மறுபடிக்கம் உருண்டோடிய வண்டிலைப் போல, அவனை மேலிருந்து கீழே விழத்தள்ளும். தனக்கு தானே குழிவெட்டும் மனிதனைப் போல, பொருளாசையுள்ள எல்லாரு டைய வழியும் அப்படியே இருக்கும். அது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும். அதாவது, உலக முழுவதையும் ஆதாயப்படுத்தி, தன் ஆத்துமாவை கெடுத்துப் போடும்.

ஜெபம்:

பரலோக தேவனே, அழிந்து போகும் இந்த உலகத்திலுள்ள செல்வங்களை நான் நாடித் தேடாமல், நித்தி சமாதானத்தை தரும் பரலோகத்துக்குரியவைகளை நாடித் தேட பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 2:15-17