புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 13, 2024)

'தாங்கள் வெட்டின குழி'

நீதிமொழிகள் 1:33

எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதி யாயிருப்பான்


கிராமப் புரத்திலுள்ள பாழடைந்த வீடொன்று கைவிடப்பட்ட நிலையிலே இருந்தது. அதற்குள் நுழைய வேண்டாம் என்றும், ஆபத்து நேரிடும் என்றும் அங்கே பெரிதான எழுத்தில் எச்சரிப்பு பலகையொன்றும் போட ப்பட்டிருந்தது. ஆனாலும், அதை யாவற்றையும் மீறி, சில வாலிபர்கள், அந்த வீட்டிற்றிற்குள் எல்லை வழியாக பாய்ந்து உள்ளே சென்றார்கள். அவர்கள் முன் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றபோது, கூரையின் ஒருபகுதி அவர்கள் மேலே விழுந்ததால், அவர்கள் வெ குவாய் காயமடைந்ததினால், மரு த்துவமனைக்கு எடுத்துச் செல்ல ப்பட்டு, அவர்கள் உயிரை காக் கும்படிக்கு, வைத்தியர்கள் உடன டியாக சத்திர சிகிச்கை செய்தார் கள். பாருங்கள், இவர்கள் தங்களுக்கு முன்பாக கண்ணியிருப்பதைக் கண்டும், தங்களுக்கு தாங்களே தீங்கு வரும்படிக்கு, அந்த கண்ணிக் குள் தங்களை அகப்படுத்திக் கொண்டார்கள். 'எவ்வகையான பட்சியா னாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா.' என்று நீதிமொழிகளின் புத்தகத்திலே வாசிக்கின்றோம். ஏனெனில், பட்சி களுக்கு மனிதனுக்கிருக்;கும் பகுத்தறிவு போன்ற அறிவு இல்லாவிடி னும், அவைகளை சிருஷ;டித்தவர், அவைகளுக்கு கொடுத்த உணர்வின் படி, தங்கள் உயிருக்கு ஆபத்து வந்திருக்கின்றது என்று கண்டு, அவை கள் அந்த இடத்தைவிட்டு சென்றிவிடும். ஆனால், மனிதர்களோ, தங் கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனை அழிக்கும் படிக்கு பதிங்கி ஒளித்திருக்கின்றார்கள். (நீதிமொழிகள் 1:17-19). மேற்கு றிப்பிட்ட சம்பவத்திலே, அந்த வாலிபர்கள், தங்கள் வாலிபத்தின் அறியாமையிலே, வீரதீர செயல்களை செய்ய முற்பட்டார்கள் என்று அந்த கிராமத்தார், அவர்களின் அறியாமையை ஒருவேளை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், தேவனாகிய கர்த்தர் பல முறை கூறியும், அநேக ஆண்டுகள் நல்ஆலோசனைகளை வழங்கியம், எத்தனையோ முறை எச்சரிப்பை கொடுத்தும், ஒரு விசுவாசியானவன், பொருளாசை, விபச்சாரம், மதுபானம், கசப்பு, வைராக்கியம், பகை போன்ற மாசம்ச இச்சைகளுக்கு தன்னைத் தான் ஒப்புக் கொடுப்பானாகில், அவனுடைய முடிவு என்னவாயிருக்கும்? பிரியமானவர்களே, கர்த்தருக்கு பயந்து அவர் வழியிலே நடவுங்கள். கண்ணிகளில் சிக்காதபடிக்கு அவர் உங்களுக்கு தேவ ஞானத்தை தந்தருள்வார்.

ஜெபம்:

புத்திமானாய் நடந்து கொள்ள ஞானத்தை அருளும் தேவனே, நான் உம்முடைய அறிவை வெறுக்காமல் பற்றிக் கொள்ளும்படிக்கு, உமக்கு பயப்படும் பயம் என்னிடத்தில் எப்போது இருப்பதாக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 9:15-16