தியானம் (ஆடி 11, 2024)
மிகவும் அதிகமான நித்திய கனமகிமை
2 கொரிந்தியர் 4:17
அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
ஒரு நாள், சில காரணங்களுக்காக குழப்பமடைந்த விசுவாசியானவ னொருவன், சபையின் மேய்பரானவரிடத்திற்கு சென்று, இன்னாரால் தனக்கு செய்த அநியாயத்திற்கு 'இன்று, இப்போது, இக்ஷணமே நீதி செய்யப்பட வேண்டும்' என்று கடினமாக பேசினான். அந்த விசுவாசி யானவன், மனமுடைந்திருப்பதையும், மிகவும் கோபமடைந்திருப்ப தையும் அவதானித்த மேய்பரானவர் அவன் தன் மனதிலுள்ளவைகளை கூறி முடிக்கும்வரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். அவன் யாவையும் பேசி முடி ந்த பின்னர், மேய்பரானவர் அவரை நோக்கி: இப்பொழுது நான் பேசுவதற்கு இடம் கொடு என்று கூறி, மகனே, உன் உடன் சகோதரன் உனக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் உனக்கு அநியாயம் செய்தது உண்மை என்பதை நான் அறிவேன். இதை கைளாளுவதற்கு மூன்று தெரிவிகள் உனக்கு உண்டு. முதலா வது: நீ பொலிசாரிடம் சென்று, அவனுக்கெதிராக முறையீடு செய்து, வழக்கை தாக்குதல் செய்யலாம். இரண்டாவது: நீ அவனிடம் சென்று அவனை பழவந்தம் பண்ணி மிரட்டல்கள் வழியாக, உன் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். மூன்றாவது: நரக அக்கினிக்கென்று நியமிக்கப் பட்டிருந்த நம்மை, தேவனானவர்தாமே, மன்னித்தது போல, அழிகின்ற ஐசுவரியத்தை அநியாயமாக பற்றிக் கொண்டிருக்கும் உன் உடன் சகோதரனை மன்னித்து விடலாம். இந்த மூன்று தெரிவுகளில் எதை செய் தாலும், இந்த உலகம் உன்னை பெரிதாக குற்றப்படுத்தப் போவதி ல்லை. ஆனால், இவற்றில் நமக்கு எது தகுதியாயிருக்கும் என்று அவ னிடம் கேட்டார். அதற்கு அவன்: இந்த வேதனையை தாங்க முடிவி ல்லை ஐயா, என்று அவன் கண்ணீரோடு பதில் கூறினான். மகனே, நாம் நீதிமானாக இருக்கும் போதல்ல, பாவிகளாக இருந்த போது, ஆண்டவராகிய இயேசுதாமே, நம்மீது அன்புகூர்ந்து தம்மைப் பலியாக ஒப்புக் கொடுத்தார். அவரை அறிந்த பின்னரும், எத்தனை தவறுகளை நாம் செய்திருப்போம். அவர் இன்று, இப்போது, இக்ஷ ணமே நீதியை சரிக்கட்டினால், நாம் யாவரும் நிர்மூலமாகியிருப்போம். இந்த உலக த்திலுள்ளவைகள் உன்னிடமிருந்து ஒருவன் பறித்துக் கொண்டால், அதை மன்னித்து விட்டுவிடு. அப்போது பரலோகத்திலே நீ அழியாக பொகிஷத்தை சேர்கின்றவனாக இருப்பாய் என்று அறிவுரை கூறினார்.
ஜெபம்:
அன்பின் தேவனே, நான் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங் கிப்போகாமலும், கலக்கமடைந்தும் மனமுறிவடையாமலும், பாரமான யாவற்றையும் தள்ளிவிட்டு இலக்கை நோக்கி பொறுமையோடு ஓட பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 14:1-3