புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 10, 2024)

அழியாதவைகளை நாடுங்கள்

மத்தேயு 5:40

உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக் கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.


ஒரு தகப்பனானவர் முதிர்வயதாகி மரிக்கும் தறுவாயில், தான் குடியிருந்த காணியை இரண்டாக பிரித்து, தன் இரண்டு குமாரர்களுக்கு கொடுத்தான். தகப்பனானவருடைய இறுதிக் கிரியைககள் முடிந்த பின்பு, காணியை இரண்டாக பிரித்து எல்லை போடுவதற்குரிய ஆய த்தங்கள் செய்தபோது, எல்லையின் அருகே ஒரு நல்ல சுவையான கனிகளை கொடுக்கும் பலா மரம் இருந்தது. அந்த பலா மரமானது, யாருடைய காணியின் பங்குக்குள் இருக்க வேண்டும் என்று மூத்தவனு க்கும் இளையவனுக்குமிடையில் வாக்குவாதம் உண்டாயிற்று. அந்த வாக்குவாதம் இரண்டு சகோதரருக்கிடையில் பிரிவினையை உண்டாக்கியதால், அந்த வழக்கை அவர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார்கள். அந்த ஊரிலுள்ள முதியவரொருவர், தம்பி மாரே, நான் உங்கள் தகப்பனானவருடைய நண்பன், இந்த அற்பமான பலா மரத்திற்காக நீங்கள் இரண்டு பேரும் சண்டை செய்வதென்ன? அது பிரச்சனையாக இருந்தால், தறித்துப் போடுங்கள். உங்கள் ஐக்கியம் அந்த பலா மரத்திலும் அதிக முக்கியமல்லவா என்று அறி வுரை கூறினார். ஆனாலும், அவர்களோ, முடிவு காணும்வரை விடமாட்டோம் என்று மிகவும் வைராக்கியமுடையவர்களாக இருந்தார்கள். இந்த உலகிலே மனிதர்கள் அற்பமான காரியங்களைக்கூட தங்கள் பொக்கிஷமாக கருதி, அவைகளை தம் வசப்படுத்த, வாதுக்கும் வழக்கிற்கும் செல்கின்றார்கள். சில விசுவாச மார்க்தத்தாரும் இதற்கு விதிவில க்கானவர்கள் அல்ல. அவர்கள் பெற்றுக் கொண்ட விலைமதி க்க முடியாத இரட்சிப்பை அற்பமான காரியங்களுக்காக இழந்து போவதற்கு ஆயத்தமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். 'உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக் கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ' என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். அதாவது, அற்பமான இந்த உலகத்தின் காரியங்களை குறித்து தர்க்கித்து, அவைகளை உங்கள் வசப்படுத்திக் கொள்வதற்காக மேன்மையா வைகளை இழந்து போகாமல், மேன்மையானதை பற்றிக்கொள்வதற்காக, அதிசீக்கிரத்தில் அழிந்து போகின்ற அற்பமானவைகளை விட் டுவிடுங்கள்.

ஜெபம்:

உன்னதத்தில் வாசம் செய்யும் பரிசுத்தரே, அதிசீக்கிரத்தில் அழிந்து போகும் அற்பமானவைகளுக்காக, பரலோக மேன்மைகளை இழந்து விடாதபடிக்கு, ஞானமுள்ள இருயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1