புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 08, 2024)

முதன்மையானது எது?

பிலிப்பியர் 3:11

அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.


ஒரு மனிதனானவன், தன் உத்தியோகத்தின் ஆரம்ப நாட்களிலே, தான் வாழும் தேசத்திலுள்ள குறிப்பிடப்பட்ட பெரிய ஸ்தாபனமொன்றின் தலைவராக வரவேண்டும் என்பதை தன் வாழ்வின் பிரதானமான இலக்காக கொண்டான். அதற்கேற்றபடிக்கு, எந்ததெந்த நண்பர்கள், உறவினர்கள் தன் இலக்கை அடைவதற்கு தடையாக இருப்பார்கள் என்று ஆராய் ந்தறிந்து, அவர்களை தன்னைவிட்டு தூரப்படுத்திக் கொண்டான். இப் படியாக தன்னுடைய வாழ்க்கை முறை, பொழுது போக்கு, தான் இருந்த ஊர் யாவற்றையும் மாற்றிக் கொண்டு, தான் புதிதாக சென்ற ஊரிலே, இந்த உலகிலே தன் இலட்சியத்தை அடைவதற்கு தடையில்லாமல், ஆதரவாக இருக்கும் சிறப்பு குடிமக்கள் சென்று வரும் ஆலயத்தையும், போதகரையும் தேடிக் கண்டு பிடித்துக் கொண்டான். ஆலய மும், கிறிஸ்தவ வாழ்க்கையையும், அவனுடைய பிரதான இலக்கின் ஒரு சிறுபகுதியாக வைத்துக் கொண்டான். இவ்வண்ணமாகவே இன்று சிலர், இந்த உலகத்திலே தாங்கள் அடைய வேண்டிய இலக்குக்கு ஒருவேளை தேவன் ஆதரவாக இருப்பாராக இருந்தால், அவரையும் எங்களுடைய திட்டத்திற்குள் போட்டுக் கொள்வோம் என்ற மனநிலையு டையவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, உங்கள் வாழ்வில் பிராதானமாக இலக்கு என்ன சென்று ஒருவர் உங்களிடம் கேட்டால் நீங்கள் கூறும் பதில் என்னவாக இருக் கும்? சிலர், தாங்கள் வைத்தியராக வேண்டும், உலக விளையாட்டுப் பந்தையப் போட்டியிலே தங்கப் பதக்கம் பெற்றுக் கொள்ள வேண்டும், என்னுடைய பிள்ளை இந்த தேசத்திலே பெரியவான வரக் காணவே ண்டும் என்று பற்றபல இலக்கு களை கொண்டுள்ளார்கள். இந்த உல கிலே அவர்கள் அவற்றை பின் தொடர்ந்து அவர்களில் சிலர் அதை பெற்றுக் கொள்கின்றார்கள். ஒருவனுடைய இலக்கானது பரலோகத்திற் குரியதாக இருந்தால், அவனுடைய பூவுலக வாழ்வின் திட்டங்கள் யாவும் அந்த இலக்குக்கு உட்பட்டதாக இருக்கும். ஆனால், ஒருவனுடைய இலக்கானது இந்த பூவுலகம் சார்ந்ததாக இருந்தால், பரலோகம் அவனுடைய இலக்குக்குள் கட்டுப்பட்டு இருப்பதில்லை. அழியாமை அழிவுக்குரியதால் ஆளப்படுவதில்லை. எனவே பரலோகத்தை உங்கள் வாழ்க்கையின் பிரதான இலக்காக கொண்டிருந்தால், உங்கள் வாழ்க் கையின் மற்றய திட்டங்கள் யாவும் அந்த மேன்மையான இலக்கிற்கும், தேவ சித்ததிற்கும் உட்பட்டிருப்பதாக.

ஜெபம்:

மேன்மையான பரமதேசத்திற்காக என்னை அழைத்த தேவனே, இந்த உலகத்தின் மாயைக்குள் சிக்குண்டு பின்னிட்டு போகாதபடிக்கு, பெற்றுக் கொண்ட மேன்மையை உணர்ந்து வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 11:13-16