புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 07, 2024)

உள்ளத்தில் மறைந்திருப்பதை யார் அறிவார்?

ரோமர் 8:27

இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.


இன்னும் இரண்டு கிழமைகளில் என் பாடசாலை நண்பர்களோடு நான் சுற்றுலா செல்ல வேண்டும். அதற்காக அனுதிமதியை பெற்றுக் கொள் வதற்கு, இந்நாட்களிலே நான் என் அப்பாவிற்கு பிரியமாக நடந்து கொள்ள வேண்;டும் எனவே நான் இன்று மாலை அந்த வயல்பக்கமாக விளையாடுவதற்கு வரமாட்டேன். அப்பா எனக்கு இரண்டு மாததிற்கு முன் கொடுத்த சில வேலைகளை இந்தக் கிழமை நான் செய்து முடி க்கப் போகின்றேன் என்று ஒரு வாலி பனானவன் தன் நண்பனுக்கு கூறிக் கொண்டான். இவ்வண்ணமாக அவன் சுற்றுலாவிற்கு செல்ல தன் தகப்பனா னவருடைய அனுமதியைப் பெற்றுக் கொள்ளும்வரைக்கும், அவன் மிகவும் கவனத்துடன், தகப்பனானவர் கூறிய ஒழுங்கு முறைகள் யாவற்றையும் கைகொண்டு, கீழ்படிவுள்ளவனாக இருந்து வந்தான். இள வயதும், அறியாமையும், வாழ்வின் தார்பரியத்தையும், தன் தகப்பனானவர் ஏன் தன் நாளாந்த நடவடிக்கைகளைக் குறித்து மிகவும் கரிசணையுள் ளவராக இருந்து வருகின்றார் என்பதை உணர்ந்து கொள்ளமுடியாமல் அவன் மனக் கண்களை மறைக்கப்பட்டிருந்தது. நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படிக்கு அழைக்கப்பட்டிருக்கும் அருமையான சகோ தர சகோதரிகளே, மேற்கூறிய சம்பவத்திலே தன் தகப்பனானவர் தன் மகனானவனைக் குறித்து மனதில் கொண்டிருக்கும் மேலான நோக்க த்தை உணராமல், குறுகிய கால மாம்ச இச்சைகளை நிறைவேற்றும் படிக்கு, அந்த மகனானவன் தன் தகப்பனானவருக்கு முன்பாக நல்ல வேடம் போட்டுக் கொண்டான். இன்று சிலருடைய கிறஸ்தவ வாழ்வும் இப்படியாக இந்த பூவுலகத்தின் அற்ப ஆசைகளையும், அழிந்து போகும் ஆசீர்வாதங்களையும் குறித்ததாகவே இருக்கின்றது. வெளி யிலே தேவ பக்தியின் வேடமும், உள்ளே உலக ஆசைகள் நிறைந்த தாவும் இருக்கின்றது. ஒரு வேளை இந்த பூவுலகிலுள்ள தகப்பன்மார், அத்தகைய வேடங்களை கண்டு, நம்பி, ஏமாந்து போகலாம். ஆனால், மனதின் யோசனைகளை அறிந்த நம்முடைய பரம தந்தையாகிய தேவ னாகிய கர்த்தர் முன்னிலையில் யார் வேடம் போட முடியும்? மனுஷ ருக்கு முன் நீதிமான்கள் என்று புறம்பே காட்சியளித்து, உள்ளத்திலோ மாயத்தினால் நிறைந்திருக்கிறவர்களைஆண்டவராகிய இயேசு கடிந்து கொண்டார். எனவே நாம், மேலே கூறப்பட்ட சம்பவத்திலுள்ள மகனானவனுடைய வாழ்க்கையை அல்ல, நாம் நம்முடைய வாழ்க்கை யை உய்ந்து ஆராய்ந்து அறிந்து, தேவனிடத்திலே திரும்ப வேண்டும்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்தறிக்கின்ற தேவனே, மாய்மாலமான வாழ்க்கையை நான் வாழாதபடிக்கு, உமக்கு முன்பாக உண்மையுள்ளவனாக காணப்படும்படி, உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:1-2