புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 06, 2024)

கனிகளால் உறுதி செய்யப்படும்

எபேசியர் 4:24

மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள் ளுங்கள்.


ஒரு ஊரிலே, பல தசாப்தங்களாக நடந்து வந்த யுத்தத்தினாலே, சமுதாய சீர்குலைவுகள் சில தலைமுறைகளாக நடைபெற்றுக் கொண்டிரு ந்ததினால், சீரற்ற வாழ்க்கையானது, புதிய தலைமுறையின் வழக்க மாயிற்று. ஏனெனில், அவர்கள் பிறந்த நாளிலிருந்து கண்டிடறிந்த யாவும், சீரற்றதாகவே இருந்தது. அப்படியாக, தன் கண்போன போக்கிலே வாழ்ந்து வந்த மனிதனொருவன், சீர்வாழ்வைத் தேடி, சீரும் செழிப்புமான ஒரு தேசத்தி ற்கு சென்று தஞ்சம் புகுந்தான். அந்த தேசத்தின் குடியுரிமைக ளையும் அதனால் உண்டாகும் உரி மைகளையும், சலுகைகளையும் பெற்றுக் கொள்வதற்காக, சில ஆண்டுகள் தரித்திருந்து, அதற்கு தேவையான முன்தகமைகள் யாவையும் படிப்படியாக நிறைவேற்றி முடித்தான். அந்த கால எல் லையும், முன் தகைமைகள் யாவும் நிறைவேறிய போது, அவன் அந்த அந்தஸ்தை பெற்றுக் கொண்டான். பிரியமானவர்களே, அந்த மனித னாவன், அந்த தேசத்தின் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்குரிய நிபந்தனைகள் யாவும் நிறைவேற்றும், எல்லா படிமுறைகளையும் செய்து முடித்தான். அதன் பலனாக அவன் குடியுரிமை சாட்சிப் பத்திரத்தை பெற்றுக் கொண்டான். அந்த பத்திரத்தை அவன் பெற்றுக் கொண் டதினாலே அவன் உண்மையாக அந்த சீரும் செழிப்புமுள்ள தேசத்தின் நல்ல குடிமகனாக, அந்த தேசத்தாரைப் போல நெறிமுறைகளோடு வாழ்வான் என்பது நிச்சயப்படுத்தப்பட்டாயிற்று கூறுவீர்களா? அல்லது, அவன் இனி எப்படி வாழப்போகின்றான் என்பதையும், அவன் வாழ்க் கையில் வெளிப்படும் கனிகளையும் வைத்து, அவன் உண்மையிலே அந்த தேசத்தின் குடிமகனானவனைப் போல வாழ்கின்றான் என்று கூறு வீர்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒருவன் ஞானஸ்நான சாட்சிப் பத்திரத்தை வைத்திருப்பதினாலும், அவன் ஞாயிறுதோறும் சபைக்கு சென்று வருகின்றான் என்பதாலும் அவனை கிறிஸ்தவன் என்று கூற முடியுமா? அவைகள் அவன் பெயரவில் கிறிஸ்தவன் என்று காண்பிக்கும். வேதத்திலுள்ள நிபந்தனைகளும் ஒழுங்கு முறைகளும் மிக அவசியமானவைகள். ஆனால், ஒருவன் அதை மனதாரக் கைக்கொண்டால், அவன் கிறி ஸ்துவை உடையவனாக இருப்பான். அவன் கிறிஸ்துவையுடையவன் என்பதை அவன் வாழ்க்கையில் வெளிப்படும் கனிகள் உறுதிப்படுத்தும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, நான் முந்தின நடக்கைக்குரிய பழைய மனுஷனின் சுபாவங்களை களைந்துபோட்டு, உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவனாக வாழும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-2