புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 04, 2024)

தீவட்டிகள்

மத்தேயு 25:4

புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.


ஒரு தகப்பனானவர், தன் மனைவி பிள்ளைகளோடு வாரஇறுதி நாட் களை கழிப்பதற்காக காட்டு பிரதேசத்தோடு சார்ந்த ஆற்றங்கரை அரு கிலுள்ள தங்கள் கிராமப்புற மனைக்கு (Cottage) சென்றிருந்தார்கள். அந்த இடத்திலே மின்சார வசதிகள் இல்லாதிருந்ததால், மின்கலத்தில் (Battery) வேலை செய்யும் மின்விளக்குகளை தங்களோடு எடுத்துச் சென் றார்கள். பாதி இரவு கழிந்ததும், மின்கலங்கள் முழுமையாக திறனேற்ற ப்படாததால் (Not Fully Charged), அதி லுள்ள மின்சார பற்றக்குறையினால் மின்குமிழ்கள் அணைந்து போயிற்று. அதனால அவர்கள் பாதி இராத்திரி யை வனவிலங்குகளுள்ள தனிப்படுத் தப்பட்ட இடதிலே, செலவிடப்பட வே ண்டியதாயிற்று. அதன் அடிப்படைக் காரணம் என்ன? மினகலங்கள் மின் சாரத்தின் மூலத்தொகுதியோடு இணை க்கப்பட்டிருக்கவில்லை. உலகத்திற்கு ஒளியாக இருக்கும்படி அழை ப்பட்ட அருமையான சகோதர சகோதரிகளே, உங்கள் வெளிச்சம் எரி ந்து கொண்டிருக்கும்படி அதை அனல் மூட்டி எரிய விடுங்கள். இந்தப் பூலக வாழ்க்கையிலே, ஓய்வு நேரங்களை நாடி, மனிதர்கள் பற்பல இடங்களுக்கு சென்று, அநேக காரியங்களை செய்து வருகின்றார்கள். இத ற்கு விசுவாச மார்க்கத்தாரும் விதிவிலக்கானவர்கள் அல்ல. வியபாரம், கல்வி, கொண்டாட்டங்கள், சுற்றுலா, உல்லாசம் போன்ற பயணங்கள் தவறானது என்பது பொருளல்ல. நீங்கள் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும், திராட்சைசெடியாகிய இயேசுவோடு இணைந்திருக்கும் தொடர்பை வெட்டிவிட்டு, திறனேற்றப்படாத மின்கலங்களை எடுத்துச் சென்ற அந்தக் குடும்பத்தாரைப் போல, உங்கள் சுயபலத்திலே சார் ந்து, பயணங்களையும், தீர்மானங்களையும் எடுக்க எத்தனிப்பீர்களா னால், நீங்கள் இருளிலே போக வேண்டிய பாதை எது என்று தீர்மா னிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உண்டாகலாம். தங்கள் மணவாளன் வரக் காத்திருந்த, புத்தியுள்ள ஐந்து கன்னிகைகள், தங்கள் தீவட்டிக ளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோ னார்கள். நாம் சகல சத்தியத்திலும் நடக்கும்படியாக, நம்மோடு என் றென்றும் இருந்து நம்மை வழிநடத்தும்படிக்கு சத்திய ஆவியாகிய தேற்றரவாளனை நமக்கு தந்திருக்கின்றார். அந்த அபிஷேகத்திலே நிலைத்திருங்கள். இரட்சிப்பின் நாளுக்கென்று முத்திரையாக பெற்ற ஆவியானவரை துக்கப்படுத்தாதிருங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, மனுஷகுமாரன் வரும் நாளை நான் அறியா திருக்கிறபடியால், நான் உணர்வுள்ள இருதயத்தோடு விழிப்பாய் இருக்க தூய ஆவியின் அபிஷேகத்தை தந்து அனல்மூட்டி எரியச் செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 தீமோ 1:6