புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 03, 2024)

உங்கள் மத்தியஸ்தர் யார்?

எபிரெயர் 9:15

புது உடன்படிக்கையின் மத் தியஸ்தராயிருக்கிறார்.


அக்காலத்திலே, பிரதான ஆசாரியன்; வருஷத்திற்கு ஒருதரம், தனக்கா கவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் பலிகளை செலுத்தும்படி, மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செலுவான். மற்றய ஆசாரியர்களோ, ஜன ங்களோ அந்த இடத்திற்கு செல்ல முடியாது. வாக்களிக்கப்பட்ட மீட்பரா கிய இயேசு கிறிஸ்துதாமே, மனித குலத்தின் அக்கிரமங்களை நிவிர் த்திசெய்யும்பொருட்டு தம்மைப் பலி யாக ஒப்புக்கொடுத்து, அழைக்கப்ப ட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப் பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக் கையின் மத்தியஸ்தராயிருக்கிறார். பழைய ஏற்பாட்டின் பலிகளும் முறை மைகளும் வரவிருக்கும் காரியங்களுக்கு நிழலாக இருந்தது. நிஜமான காரியமானது ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக வெளிப்பட்டது. நிஜமானது நமக்காக ஆயத்தப்பட்டிருக்கின்றபோது, நிழலானதை ஒரு வரும் பற்றிக் கொள்வதில்லை. இக்காலத்திலே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்த்தினாலே சுத்திகரிக்பபட்டு, பரிசுத்தவான்களாக அழை க்கப்பட்ட நாம், சீர்பொருந்தும்படிக்கு சபையையும் ஊழியங்களையும் ஏற்படுதினார். அந்த சீர்பொருந்துதலின் காரியமானது, உயிரோடிருக்கும் ஊழியர்களோ அல்லது கர்த்தருக்குள் பரிசுத்தமாக வாழ்ந்து இந்த உல கத்தைவிட்டு கடந்து சென்றிருக்கும் பரிசுத்தவான்களோ தேவனுக்கும் நமக்குமிடையினாலே உள்ள மத்தியஸ்தர்கள் என்பது பொருளல்ல. மாறாக, தற்போதிருக்கும் ஊழியர்களும், நமக்கு முன்பாக சென்று வெற்றி வாழ்க்கை வாழ்ந்து கர்த்தருக்குள் நித்திரையடைந்திருக்கும் திரளான மேகம் போன்ற சாட்சிகளும், நம்மை ஆண்டவர் இயேசுவோடு இன்னும் கிட்டே சேர்வதற்கு ஆதரவளிக்கின்றவர்களாக இருக்க வேண் டும். நாம் ஒவ்வொருவரும், ஒருவருக்காக ஒருவர் பரிந்துபேசி ஜெபி ப்பதற்கும், ஒருவரை ஒருவர் தாங்கி, ஊக்குவித்து, பக்திவிருத்திகே துவானவைகளை செய்ய வேண்டும். அதனால், நாம் மத்தியஸ்தர்கள் ஆகிவிடுவதில்லை. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத் தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்பு க்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே. பிரியமானவர்களே, என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்;. என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய் யக்கூடாது என்று ஆண்டவர் இயேசு கூறிய வார்த்தைகளை அனுதின மும் தியானித்து, அவரோடுள்ள உறவிலே வளர்ந்து பெருகுங்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, மத்தியஸ்தருக்குரிய இடத்தை எந்த மனிதர்களுக்கும் கொடுக்கபாதபடிக்கு, ஆண்டவர் இயேசுவிலுள்ள உற விலே அனுதினமும் வளர்ந்து பெருக என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 10:7-15