தியானம் (ஆடி 02, 2024)
'உங்களுடைய வெளிச்சம்'
பிலிப்பியர் 2:14
ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப் போலப் பிரகாசிக்கிற நீங்கள்,
ஒரு விவசாயினானவன், தன் பிரயாசத்தின் விளைச்சல்களை சந்தைப்படுத்தும் பொருட்டு, அடுத்த ஊருக்கு செல்லும்படிக்கு, அதிகாலையிலே துரிதமான புறப்பட்டுச் சென்றான். மாலையிலே இருட்டுவதற்கு முன் வீடு திரும்புவ தாக எண்ணியிருந்தபடி திரும்ப முடியாமல் தாமதமாயிற்று. அதிகாலையிலே அவசரவசரமாக சந்தைக்கு செல்ல ஆயத்தப்பட்டதால், அவன் விளக்கு பந்தத்தை தன்னோடு எடுத்துச் செல்ல மறந்து போனான். திரும்பும் வேளையிலே இருட்டிவிட்டாதால், போகும்பாதை சரியாக தெரியவில்லை. ஆதலால், தனக்கு முன்பாக சென்ற வியாபாரியானவனின் கையிலே விளக்கு பந்தம் இருந்ததால், அந்தப் பந்தத்தின் வெளிச்சதிலே அந்தப் அவனுக்கு பின்பாக நடந்து சென்றான். இந்த விவசாயிபோகும் பாதை அந்த வழியாக சென்ற வியாபாரியின் கரங்களிலே தங்கியிருந்தது. பரம அழைப்பின் பந்தை யப் பொருளை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் அருமையான சகோதர சகோதரிகளே, கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள் ளைகளுமாக வாழும்படிக்கு நாம் ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிறவர்களாக காணப்பட வேண்டும். மாறாக, நாம் வேறொருவரின் வெளிச்சத்திலே நடக்கின்ற வர்களாக காணப்படும் போது, நம்முடைய உன்னதமாக ஜீவ யாத்திரையின் பொறுப்பை வேறொருவரின் வாழ்க்கையிலே தங்க வைத்து விடுகின்றோம். இன்று சில விசுவாசிகள் இவ்வண்ணமாகவே, அங்கே போதனை இங்கே போதனை என்று பிரபல்யமானவர்களை தங்கள் ஜீவ ஒட்டத்தின் வெளிச்சமாக வைத்து கொள்கின்றார்கள். மனிதர்களாகிய அவர்கள் தவறி விடும் வேளையிலே, அவர்களை நம்பியிருந்த இந்த விசுவாசிகள் ஏமாற்றமடைந்து, சோர்ந்து, பின்னிட்டு திரும்பிவிடுகின்றார்கள். நாம் நம்முடைய பேச்சிலும் கிரியைகளிலும் ஒருவரை யொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்ய வேண்டும். ஆனால், நம்முடைய அருமையான இரட்சிப்பின் பொறுப்பை இன்னுமொருவரின் கையிலே கொடுத்து விட முடியாது. எந்நேரமும், எவ்வேளையும், நாம் ஜீவ வசனத்தை மறந்து போய்விடக்கூடாது. எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அவை யாவும் தேவனுடைய வசனத்தின்படி இருக்கும்படிக்கு, தேவ வசனமே நம்முடைய தியானமாக இருக்கட்டும்.
ஜெபம்:
ஜீவ ஒளியை என்னில் பிரகாசிப்பித்த தேவனே, மனுஷர் என்னுடைய நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உம்மை மகிமைப்படுத்தும்படி என்னுடைய வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 5:16