தியானம் (ஆனி 30, 2024)
நாம் பாக்கியம் பெற்ற பிள்ளைகள்
ரோமர் 8:39
உயர்வானாலும், தாழ்வா னாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனு டைய அன்பை விட்டு நம்மைப் பிரிக்க மாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
நாளாந்தம் கடுமையாக உழைத்து தன் குடும்பத்தை விசாரித்து வந்த தகப்பனானவர், படாசாலைக்கு செல்ல தன் மகனானவனுக்கு புதிய காலணிகளை தேவை என்பதை அறிந்து கொண்டார். கடையிலே இரு க்கும் அதி சிறந்த காலணிகளை வாங்கிக் கொடுப்பதற்கு அவரு க்கு அதிகநிர்வாகம் இல்லாதிருந்த போதும், தன்னிடமிருந்த நிர்வாகத்தின் அளவிற்குள் எவ்வளவு சிறந்த கால ணிகளை வாங்க முடியோ, அதை வாங்கி கொண்டு வந்து, தன்னுடைய மகனானவனுக்கு கொடுத்தான். கால ணிகளை பார்த்த மகனானவன், பரவ சம் அடைந்தான். அதைக் கண்ட தகப் பனானவருடைய உள்ளம் மகி ழ்சியால் பொங்கிற்று. ஆம் பிரிய மான சகோதர சகோதரிகளே, இந்த உலகத்திலே நமக்கு இருக்கும் பெற் றோர் பெலவீனமும் குறைவுமுள்ள வர்களாக இருக்கின்ற போதிலும், தங்களுடைய பிள்ளைகளுக்கு தங் களால் முடிந்த அளவிற்கு திறமான வைகளை கொடுக்கின்றார்கள் அல்லவா? 'உங்களில் எந்த மனுஷ னானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல் லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பை க்கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டி க்கொள்ளு கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். ஆம், பிரியமானவர்களே, தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாரா மல் நம்மெல்லாருக்காகவும் இயேசுவை ஒப்புக்கொடுத்தவர், அவரோ டேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? (ரோமர் 8:32). நம்முடைய பரம பிதா நம்மேல் பாராட்டுகின்ற அன்பு எவ்;வ ளவு பெரியதென்று பாருங்கள். அவர் நம்முடைய பட்சத்திலிருப்பதால் நாம் ஏன் அழுத்தும் சுமைகளையும் பாரங்களையும் குறித்து பயப்பட வேண்டும்? நம்முடைய பரம பிதா நமக்கு தீங்கு ஏதும் செய்ய மாட்டார் என்று அறிக்கை பண்ணுவதில் மாத்திரமல்ல, நெருக்கங்கள் சூழ்ந்து கொள்ளும் போது, தளர்ந்து போகாமல், அவிசுவாசத்திற்குரியவ hர்த்தைகளை பேசாமல், நம்பிக்கையில் உறுதியாய் நிலைத்திருங்கள்.
ஜெபம்:
வாக்குத்தத்தம்பண்ணின உண்மையுள்ள பரம தந்தையே, என்னுடைய நம்பிக்கையை நான் அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கும்படி எனக்கு பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 யோவான் 3:1