தியானம் (ஆனி 29, 2024)
கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பீர்களாக
உபாகமம் 6:16
உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பீர்களாக.
வாலிப வயதிற்கு வந்த தன் மகனானவனின் பிறந்த நாளென்று அவனுக்கு கை தொலைபேசி சாதனத்தை பரிசாக கொடுத்த பெற்றோர். வாலிப நாட்களிலே எங்கு செல்ல வேண்டும்? என்ன செய்ய வேண்டும் என்ற மட்டுமல்ல, எங்கு செல்லக்கூடாது என்றும் என்ன செய்யக்கூடாது என்றும் அவனுக்கு விளக்கமாக கூறியிருந்தார்கள். ஒரு நாள் அவன் தன் நண்பர்களோடு, பெற்றோர் போகாதே என்று கூறிய வயல் பக் கமாக சென்றான். அதனால் தன்னை பிரச்சனைக்குள்ளாக்கிக் கொண் டான். உடனடியாக, தன் கைத் தொலை பேசி வழியாக தன் தகப்பனானவரை அவசரமாக அழைத் தான். அந்த வாலிபனுடைய தகப்பனானவர், பொலிஸ் அதிகாரியாக இருந்தால், அவர் உடனடியாக வந்து அவனை பாதுகாப்பாக தன் வாகனத்திலே கூட்டிச் சென்றார். பெற்றோர் அவனை கடிந்து கொண் டார்கள். சில நாட்களுக்கு பின்னர், அவன் மறுபடியும், ஊரிலே, பெற் றோர் போகாதே என்று கூறிய வேறுறொரு காட்டுப் பக்கமாக, தன் உறவு முறையானோரின் நிர்பந்தத்தால் சென்றிருந்தான். அங்கும் கல கம் உண் டானதினாலே, தன் தகப்பனை அழைத்தான். அவர் மறுபடியும் வந்து அவனை மீட்டுக் கொண்டார். இப்படியாக மாதத்திற்கு மாதம், அவ்வப் போது, அந்த வாலிபனானவன் பிரச்சனைகளில் சிக்கிக் கொண் டான். பிரியமான சகோதர சகோதரிகளே, இந்த சம்பவத்திலே, யார் யாரை பரீட்சை பார்கின்றார்கள்? தகப்பனானவன் தன் மக னானவனை சோதி த்தறிகின்றாரா? இல்லை, மகனானவனே, தன் தகப் பனாவரின் பாது காப்பை பரீட்சை பார்க்கின்றவனாக வாழ்ந்து வந்தான். அன்று வனாந்தி ரத்தின் வழியாக கடந்து சென்று கொண்டிருந்த தேவ ஜனங்கள், தங்கள் தேவனாகிய கர்த்தரை பத்துமுறை பரீட்சித்துப் பார்த்தார்கள். அவர்கள் வணங்கா கழுத்துள்ளவர்களும், கீழ்படியாதவ ர்களுமாக இருந்ததால், அப்படி தேவனை சோதித்துப் பார்த்தார்கள். இன்றும் சில விசுவாசிகள் தேவ கிருபையை அற்பமாக எண்ணி, மேலே கூறப்பட்ட சந்தர்ப்பத்திலே உள்ள அந்த மகனானவனை போல, தங்கள் பரம தந்தையை பரீட்சை பார்கின்றார்கள். நீங்களோ, அப்படி யாக பரம தந் தையை பரீட்சை பார்த்து உங்கள் மனதை உணர்வற்று போகப் விடாமல், தேவனாகிய கர்த்தரை நம்பி, அவருடைய வழியிலே நடவுங்கள். அவருடைய வார்த்தையிலே உறுதியாய் நிலைத்திருங்கள். அப்பொழுது உங்கள் வாழ்க்கையில் நன்மையும் கிருபையும் உங்க ளைப் பின் தொடரும்.
ஜெபம்:
அன்பின் பரம தந்தையே, நான் ஒருபோதும் உம்மை பரீட்சை பார்க்காமல், உம்மை நம்பி உம்முடைய வார்த்தையின் வழியிலே நடக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 23:1-6