தியானம் (ஆனி 27, 2024)
மீறுதல்கள் எல்லாம் தேவ சிட்சையல்ல
நீதிமொழிகள் 3:5
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
ஒரு தகப்பனானவன் தான் நேசிக்கின்ற புத்திரனை சிட்சிக்கின்றது போல, நம்முடைய தேவனானவரும் நம்மை கடிந்து கொண்டு சிட் சிக்கின்ற நேரங்கள் உண்டு என்பதைக் குறித்து கடந்த நாட்களில் தியா னித்தோம். விசுவாசிகளுடைய வாழ்விலே ஏற்படும் எல்லா நெருக்கங் களும் தேவனுடைய சிட்சை என்று கூறிக் கொள்ள முடியாது. எரிந்து கொண்டிருக்கும் அடுப்பிலே கை யைப் போடாதே என்று ஒரு தகப்ப னானவன், தன் மகனானவனுக்கு அறி வுரை கூறி, கண்டித்து வந்தார். அவன் சொல்லு மீறி நெருப்பிலே விரலை வைக்க செல்லும் வேiயிலே, அவ னை சிட்சித்தார். ஆனால், அவனோ எப்படியாவது அந்த நெருப்பிலே கையை வைத்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமுடையவனாக இருந்த தால், சந்தர்ப்பம் கிடைத்த போது, கையை நெருப்பிலே வைத்தான். அதனால் அவனுக்கு வேதனையுண்டாயிற்று. 'சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.' என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. ஆனாலும், சில விசுவாசிகளோ, விவாதம் செய்வதை தங்கள் பெலன் என்று எண்ணி, அதை விட்டுவிடாதிருக்கின்றார்கள். அதன் முடிவு என்னவாக இருக்கும்? அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடு என்ற தேவ ஆலோசனையை தள்ளி, தரித்து நிற்பேன், சங்கதி என்ன என்று ஆராய்வேன் என்று கூறுபவனின் வழி எப்படியாக இருக்கும்? பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேர் என்பதை விசுவாசிகள் யாவரும் அறிந்திக்கின்றார்கள். அதை வாஞ்சித்து நாடித் தேடுகின்றவன் தன்னையே தான் கண்ணிகளுக்குள் சிக்க வைத்து கொள்கின்றான். நாம் பாவத்திற்குட்படாதபடிக்கு பிதாவானவர் நம்மை சிட்சிக்கின்றார். ஆனால், இல்லை நான் அதை நாடித் தேடுவேன் என்று மனதிலே தீர்மானம் செய்து கொள்பவன், திருடனாகிய பிசாசானவன் உள்ளே நுழைவதற்கு தன் இதயக் கதவை திறந்து விடுகின்றான். அப் படி செய்கின்றவன், திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வரு கிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான் என்ற வார்த்தையின்படி பல வேதனைகளை தன் வாழ்விலே அனுமதிக்கின்றவனாக வாழ்கின்றான். எனவே, கர்த்தருடைய வார்த்தையை கேட்டு, இடது புறமோ, வலது புறமாக சாயாமல், உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். சத்திய ஆவியானவர்தாமே பெலப்படுத்தி நடத்தி செய்வார்.
ஜெபம்:
அன்பின் தேவனே, என் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்பட்டு போகாதபடிக்கு என்னுடைய என் சிந்தையை உம்முடைய வார்த்தையினால் நிறைத்து காத்துக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யாகோபு 1:13