புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 26, 2024)

என் நெருக்கங்களுக்கு யார் காரணம்?

நீதிமொழிகள் 19:23

கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவ னுக்கேதுவானது;


தன் மகனானவன் வாலிப பிராயத்தை அடைந்ததும், சில புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டதை கண்ட தகப்பனானவர், குறிப்பாக ஒரு வாலிபனைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி பல தடவை கள் தனக் மகனானவனுக்கு அறிவுரை கூறிவந்தார். அதற்கு மகனான வன்: அப்பா, நீங்கள் நினைப்பது போல அவன் நெறிகெட்டவனல்ல. அவன் அப்படி இருந்தாலும், நான் அவனுடைய வழியிலே செல்வத ற்கு மதியீனமுமல்ல என்று கூறி தன் வாழ்க்கையை நடத்தி வந்தான். அநேக ஆண்டகள் சென்ற பின்பு, மகனானவன் திருமணமாகி சிறு பிள்ளைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போது, ஒரு நாள் பொலிசார் அவனை விசாரணைக்குட்படு த்தும்படி நீதிமன்றத்தின் அனுமதியோடு வந்தார்கள். குறிப்பிட்ட அந்த நண்பனின் நட்பின் நிமித்தமாக, அவன் வாழும் அயலிலே அவன் கன வீனம் அடையத்தக்தாக, அவனை பல முறை விசாரணைக்குட்படுத்தி னார்கள். நீதியாக வாழ்ந்து வரும் எனக்கு ஏன் தேவனானவர் என்னை இப்படி சோதிக்கிறார் என்று அந்த மகனாவன் முறுமுறுத்தான். அதை கேட்டுக் கொண்டிருந்த, வயதான அவனுடைய தகப்பனானவர், மகனே: தேவன் உன்னை இந்த சோதனைக்குள் தள்ளவில்லை. பெற்றோரின் ஆலோசனைகளை நீ அசட்டை செய்ததால், நீயே உன்னை இந்த சோத னைக்குள் தள்ளிவிட்டாய் என்று கூறினார். ஆனாலும், நீ இப் போது நல் ஆலோனைகளை கேட்டு அதன்படி நடந்து கொண்டால், தேவனானவர் உனக்கேற்பட்ட தீமைகளை நன்மையாக மாற்று வார் என்று அறிவுரை கூறினார். பிரியமான சகோதர சகோதரிகளே, 'தேவன் ஏன் என்னை இப்படி சோதிக்கின்றார்' அல்லது 'இது பிசாசானவனின் கரம்' அல்லது 'அந்த சகோதரனால் இந்த தொல்லை எனக்கு வந்தது' என்று விசுவாசிகள் பொதுவாக, தங்கள் பின்னடைவுகளுக்கு தேவனை அல்லது பிசாசானவனை அல்லது மற்றவர்கள் குற்றம் சாட்டு கின்றதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். மேலே கூறப்பட்ட சந்தர்பத்திலே அந்த மகனா னவன், தகப்பனுடைய எச்சரிப்பின் சத்தத்தை அசட்டை பண்ணினதால், அவனுடைய நண்பன் வழியாக பல தொல்லைகள் தன் வீட்டிற்குள் வர இடம் கொடுத்தான். கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக் கேதுவானது. அவருக்கு பயந்து அவருடைய ஆலோசனைகளின் வழியிலே நடப்ப வன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்;. தீமை அவனை அணுகாது என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. எனவே, வாழ்வில நெருக்க ங்கள் ஏற்படும் போது, மற்றவர்கள் குற்றம் கூறுவதைவிட்டுவிட்டு, நாம் நம்முடைய வழிகளை ஆராய்ந்து பார்த்து கர்த்தரிடத்தில் திரும்பக் கடவோம்.

ஜெபம்:

பரலோக பிதாவே, நீர் விளம்பின வேததத்தின் ஆலோசனைகளை நான் அசட்டை செய்து தள்ளிவிடாமல், முழுமனதோடு உம்முடைய வழியிலே நடக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:24