புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 23, 2024)

மீண்டும் குற்றம் செய்துவிட்டேன்

சங்கீதம் 103:13

தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்


ஒரு பாடசாலையிலே கல்வி கற்று வரும் மாணவனொருவன் குற்ற மொன்றை செய்ததினாலே, அவனுடைய வகுப்பு ஆசிரியர், அவனு டைய பெற்றோரை அழைத்து, நடந்த சம்பவத்தைக் குறித்து விபரித்து கூறினார். அந்த மாணவனுடைய தகப்பனானவர், அந்தக் காரியத்தை தான் கவனிப்பதாக உறுதிமொழி கூறி, தன் மகனானவனனை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுவித்தார். அவன் வீடு திரும்பியதும், அவனுடைய பொறுப்பற்ற செய்கையை கடிந்து கொண்டு, அவனு டைய தவறான செய்கைகளினாலே வரக்கூடிய பாதகமான பின்விளைவுகளை எடுத்துக்கூறி, இனி அப்படி செய்யாதே என்று அறிவுரை கூறி னார். அவருடைய மகனானவனும், தன் தவறான செய்கையை குறித்தி உண்மையாக மனம்வருந்தியதை அவர் கண்டு கொண்டார். சில ஆண் டுகள் கடந்து சென்ற பின்பு, எதிர்பாராத விதமாக, அவருடைய மகனானவன் வேறறொரு குற்றமொன்றிலே அகப்பட்டுக் கொண்டான். அவன் உடனடியாக தன் தகப்பனானவரை அழைத்து, அப்பா, நான் தவறு செய்தது உண்மை. ஆனால் நான் அதை திட்டமிட்டு செய்யவில்லை என்று கண்ணீரோடு தகப்பனாவரிடம் கூறினார். அவன் அதை திட்டமிட்டு செய்யவில்லை என்பதை தகப்பனானவரும் அறிந்து கொண்டார். ஆனாலும், அவன் தான் நிற்க வேண்டிய இடத்திலே நிற்காமல் போனதினாலேயே அது நேரிட்டது என்று யாவரும் அறிந்து கொண்டார்கள். அவனை மறுபடியும் கடிந்து கொண்ட தகப்பனானவர், அவனுக்கு உதவி செய்ய ஆயத்தமுள்ளவராகவே இருந்தார். பிரியமான சகோதர சகோதரிகளே, 'இனி அப்படி செய்யாதே' என்று அவனுடைய தகப்பனானவர் முன்பு கூறியிருந்தார். அதன் பொருள் என்ன? இந்த உலகத்திலே நீ இனி தவறிவிடக்கூடாது என்பதா? இனி நீ தவறு செய்தால் உனக்கு மீட்பு இல்லை என்பதா? இனி சம்பூரணனான வாழ வேண்டும் என்பதா? சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் பரிசுத்தமுள்ளவர்களாக வாழ வேண்டும் என்று நம்முடைய பரம பிதா, அதற்கு தேவையான யாவற்றையும் நமக்கு கொடுத்திருக்கின்றார். ஆனாலும், அவருடைய பிள்ளைகள் தவறிப்போகும் வேளையிலே அவர் அவர்களை முற்றாக தள்ளிப்போடுவதில்லை. நம்முடைய நிலைமை நன்றாக அறிந்த, பரம பிதா ஒரு தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகின்றது போல அவருக்கு பயந்து உண்மையள்ள இருதயத்தோடு மனந்திரும்புகின்ற வர்களுக்கு மனதுருகின்றவராக இருக்கின்றார்.

ஜெபம்:

என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டின தேவனே, என் பெலவீன நேரங்களில் நீர் என்னைத் தாங்கி, துணிகரமான பாவத்திற்கு என்னை விலக்கி காத்தருளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 30:5