புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 22, 2024)

சீர்பொருந்துதல்

2 தீமோத்தேயு 3:17

அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த ஜனங்கள் மத்தியிலே வன்முறைகள் பெருகிக் கொண்டிருந்தது. ஊரின் சட்டதிட்டங்களின்படி குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு போனதினாலே, அந்த ஊரின் மூப்பர்கள் ஒன்றுகூடி இந்த பாதகமான மாற்றத்தின் மூலகாரணம் என்ன என்று பல நாட்கள் ஆராய்ந்து பார்த்தார்கள். அவர்களின் ஆராய் ச்சிகளின்படி, அந்த ஊரிலே இயங்கி வந்த சில பாடசாலைகள், வெளியூர் களிலிருந்து மாணவர்களை கவர்ந்து கொள்வதற்காக, பாடசாலை ஆரம்ப நாட்களிலிருந்த நெறிமுறையான நல்ல ஒழுங்கு முறைகளை, படிப்பபடியாக தளர்த்தி, நவீன நாகரீகமான பாணி களுக்கு அதிகதிகமாக இடங் கொடு த்து வந்ததால், தேவ பயம், மூத்தவ ர்களை கனம் பண்ணுதல், போதனை களை கேட்குதல் போன்றவைகள் பிள்ளைகளின் வாழ்விலே குறைவுப ட்டிருப் பதையும், அதன் விளைவாக, அவர்கள் துணிகரமுள்ளவர்களாக மாறிக் கொண்டு போவதையும் அவதானித்தார்கள். வெளியூர்களின் செல்வாக்கு அந்த ஊரிலே அதிகரித்துக் கொண்டு சென்றதால், அந்த ஊர்களி லிருக்கும் சில தகாத பழக்கவழக்கங்களும் இந்த ஊரிலே அதிகரிக்க ஆரம்பித்தது. எனவே, அந்த மூப்பர் சங்கமானது, ஊரைக் குறித்தும், அந்த ஊரின் ஜனங்களின் எதிர்காலத்தைக் குறித்தும் கரிச ணையுள்ள வரகளாக இருந்ததால், பாடசாலையின் ஆரம்ப வகுப்புக ளிலிருந்து மறு ம்படியும் நெறிமுறையான, நல்ல ஒழுங்கு முறைகளை கற்பிக்கும்படி ஆரம்பித்தார்கள். அருமையான சகோதர சகோதரிகளே, பிள்ளைகள் நடக்க வேண்டிய வழிகளை அவர்களுக்கு போதியுங்கள், அவர்கள் வளர்ந்தும் அதை விட்டுவிடாதிருப்பார்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. ஆனால், இன்று சில சபை ஐக்கியங்களிலே, அங்கத்தவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும், செல்வாக்குள்ள வர்களை சபைகளிலே தக்கவைப்பதற்காகவும், பரிசுத்த அலங்காரத்தின் வரைவிலக்களை மாற்றி, ஒழுங்கு முறைகளை தளர்த்தி விடுகின்றா ர்கள். பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் இடமாக ஏற்படுத்தப்பட்ட சபையா னது, வேத வார்த்தைகளின்படி சீர்பொருந்துதலைக்குறித்து சிறுவர்க ளுக்கும், வாலிபர்களுக்கும் கற்றுக் கொடுப்பதற்கு பதிலாக, அவர்கள் யாவரையும தங்களோடு எப்படியாவது; தக்கவைத்துக் கொள்ளாலாம் என்பதிலே அதிக கவனமெடுக்கின்றார்கள். நீங்களோ கர்த்தருடைய வேதத்தை கருத்தோடு பற்றிக் கொண்டிருங்கள்.

ஜெபம்:

வார்த்தையை அனுப்பி குணமாக்குகின்ற தேவனே, நான் உமக்கு முன்பாக தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 19:12-14