புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 21, 2024)

பெலத்திற்கு அப்பாற்பட்ட போராட்டங்கள்

சங்கீதம் 62:6

அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உய ர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.


சிவந்த சமுத்திரம் முன்னாகவும், அக்காலத்திலே வல்லமைமிக்க ராஜ்யம் என்று கருதப்பட்ட எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் பிரதான இரதங்களோடு அவனுடைய சேனை பின்னாகவும், இரண்டிற்கும் இடையிலே சுமார் நானூறு வருடங்கள் அடிமைகளாக ஆளோட்டிகளால் வருத்தப்பட்டவர்களும், யுத்தத்தை குறித்து எந்த அனுபவமும் இல்லா தவர்களுமான இலட்சக் கண்ணக்கான ஜனங்கள் நின்று கலங்கினார்கள். அந்த வேளையிலே தேவ ஜனங்கள் மிகவும் பயந்தார்கள். அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்: நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான். அன்று தேவ ஜனங்கள் தேவ னுடைய பலத்த கரத்தின் அதிசய செயலை கண்டு, தேவனை மகிமைப் படுத்தினார்கள். பரலோக யாத்திரிகளாகிய அருமையான சகோதர சகோதரிகளே, நம்முடைய வாழ்விலும் போராட்டங்கள் உண்டு. அவற்றுள் சில நம்முடைய பெலத்திற்கும், அறிவுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க லாம். போராட்டங்கள் என்று கூறும்போது, பொருளாதார நெருக்கடிகளையே சில விசுவாசிகள் கருத்தில் கொள்கின்றார்கள். அதுமட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலே மனதிலே உண்டாகும் போராட்டங்கள், குடும்ப வாழ்விலே குடும்பத்தினருக்கிடையிலே உண்டாகும் குழப்பங்கள், சபை ஐக்கியத்திலே சில விசுவாசிகளால் உண்டாகும் கருத்து முரண் பாடுகளும் கலகங்களும் இப்படியாக பல விதமான போராட்டங்கள் நம்முடைய வாழ்விலே உண்டாகலாம். எப்படிப்பட்ட போராட்டங்களாக இருந்தாலும், அவற்றை நாம் கர்த்தருடைய ஆலோசனையின்படியே ஜெயம் கொள்ள வேண்டும். சில வேளைகளிலே, சில காரியங்களை நாம் செய் யும்படி தேவ ஆவியானவர் பெலத்தையும் ஞானத்தையும் தந்து வழி நடத்துவார். வேறு சில வேளைகளிலே, நாம் கர்த்தருடைய வார்த்தை யை நம்பி, விக்கினங்கள் கடந்து போகும்மட்டும், அவருடைய பாதத்திலே அமர்ந்திருக்க வேண்டும். அவர் நமக்காக யுத்தம் செய்வார். அவர் பூட்டப்பட்ட கதவுளை திறக்கின்றவரும், திறக்கப்பட்ட கதவுளை அடைக் கின்றவருமாயிருக்கின்றார். எனவே, சூழ்நிலைகளை உங்கள் பெலத்திற்கு மிஞ்சிப் போகும்போது, கலக்கமடைந்து, தளர்ந்து போகாமல், உங் கள் ஆத்துமா கர்த்தரை நோக்கி அமர்ந்திருக்கட்டும். அவர் காரியத்தை வாய்க்கப்பண்ணுகின்றவராய் இருக்கின்றார்.

ஜெபம்:

எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன் னதமான தேவனே, விக்கினங்கள் சூழ்ந்து கொள்ளும் போது, நம் உம்மு டைய செட்டைகளின் நிழலிலே வந்து அமர்ந்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபே 6:11-12