தியானம் (ஆனி 19, 2024)
வாழ்வில் போராட்டங்கள்
சங்கீதம் 32:8
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
இரண்டு தேர்ச்சிபெற்ற உதைபந்தாட்ட அணிகள், தேசிய உதைபந்தாட்டப் போட்டியிலே மும்முரமாக போட்டியிட்டுக்கொண்டிருந்தது. ஒவ்வொரு அணியிலும், சிலர் தங்கள் நிலையத்தை (கோல் போஸ்ட்) பாதுகாத்துக் கொள்வதிலும், வேறு சிலர் முன்சென்று எதிரணியின் நிலையத்திற்குள் பந்தை அடிப்பதற் கென்றும் வேறு பிரிக்கப்பட்டிருந்தா ர்கள். நம்முடைய வாழ்க்கையிலும் அனுதினமும் நமக்கு போராட்டங்கள் உண்டு. தேவ பிள்ளைகளாகிய நம் முடைய போராட்டங்கள், வாக்குவாத ங்களும், சரீரபிரகாரமான சண்டை களுமல்ல என்று நாம் கூறிக் கொள் கின்ற போதிலும், சில வேளைக ளிலே மாம்சத்திற்குரிய போராட்டங் களாக மாறிவிடுகின்றது. நம்முடைய ஆவிக்குரிய போராட்டங்களிலே நாம் முன்சென்று எதிர்த்து தாக்கும் (Attacking) நேரங்கள் உண்டு. வேறு சில வேளைகளிலே நாம் நம்மு டைய அரனாண பட்டணத்திற்குள்ளே புகுந்து நம்முடைய நிலையத்தை பாதுகாக்க (Defending) வேண்டிய நேரங்களும் உண்டு. இந்த இரண்டு காரியங்களையும் நாம் பரிசுத்த வேதாகமம் கூறும்படி வெற்றிகரமாக நட ப்பிப்பதற்கு, தேவனுடைய வழிநடத்துதல் நமக்கு இன்றியமையாதது. நாம் நம்மை சுற்றி தேவனாகிய கர்த்தர் போட்டிருக்கும் பாதுகாப்பின் வேலி க்குள் இருக்கின்றவர்களாக காணப்பட வேண்டும். தேவ ஒழுங்குகளை மீறி, கடந்து சென்றபின்பு, நாம் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்று கூறிக் கொள்வது அறியாமை. அதுபோலவே, எதிரியான பிசாசனவ னுக்கு எதிர்த்து போராடி வெற்றி பெறும்படிக்கு, தேவனுக்கு கீழ்படிந்தி ருக்கின்றவர்காக காணப்பட வேண்டும். தேவனுக்கு கீழ்படியாதவன், பிசாசானவனுடைய பிடிக்குள் இருக்கின்றான். அப்படியானால் தேவனு க்கு கீழ்படியாதவன் எப்படி பிசாசாவனை ஜெயம் கொள்ள முடியும்? இவைகளை நாம் உணர்ந்து அறிந்து கொள்வதற்கு சத்திய வேதத்தின் தியானம் அவசியமானது. திருவசனத்தை கேட்கின்றவர்களாக மாத்திர மல்ல, அதை தியானித்து, அந்த அருமையான ஆலோசனைகளின் படி நாம் வாழ்க்கின்ற போது, நாம் நம்முடைய போராட்டங்களை தேவன் விரும்பும் பிரகாரமாக நடத்தி ஜெயங்கொள்கின்வர் களாகவும், ஆபத் துக் காலத்திலே தேவனுடைய பலத்த பாதுகாப்பிற்குள் சுகமாய் இருக் கின்றவர்களாகவும் காணப்படுவோம்.
ஜெபம்:
காலத்திற்குரிய நல் ஆலோசனைகளை தந்து வழிநடத்திச் செல்லும் தேவனே, என்னுடைய விருப்பப்படி போராட்டங்களை நடத்தாமல், உம்முடைய சித்தப்படி செய்து முடிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - நீதி 18:10-13